/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
அடையாறு ஆறு வரை கால்வாய் கட்ட திட்ட அறிக்கை தயாரிக்க உத்தரவு
/
அடையாறு ஆறு வரை கால்வாய் கட்ட திட்ட அறிக்கை தயாரிக்க உத்தரவு
அடையாறு ஆறு வரை கால்வாய் கட்ட திட்ட அறிக்கை தயாரிக்க உத்தரவு
அடையாறு ஆறு வரை கால்வாய் கட்ட திட்ட அறிக்கை தயாரிக்க உத்தரவு
ADDED : அக் 21, 2024 01:24 AM
பம்மல்:மழைக்காலத்தில், பம்மல் ஸ்டேட் பாங்க் காலனி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து வெளியேறும் மழைநீர், ஆண்டாள் நகர், மூவர் நகர், கவுல்பஜார் ஊராட்சி குடியிருப்பு வழியாக, அடையாறு ஆற்றில் கலக்கும். மழை அதிகமாக பெய்தால், இப்பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கும்.
இதை தடுக்க, பம்மல் ஸ்டேட் பாங்க் காலனியில் இருந்து ஆண்டாள் வழியாக மூவர் நகர் வரை, 2,000 அடி துாரத்திற்கு, 3 கோடி ரூபாய் செலவில், கால்வாய் கட்டும் பணி, 2023ல் துவங்கியது.
இப்பணியில், பொழிச்சலுார் பிரதான சாலையில், இடையில் உள்ள மின் கம்பங்களை அகற்றாமல், பாதி பாதியாக விட்டனர். அந்த இடங்களில் கழிவுநீர் தேங்கி, சுகாதார சீர்கேடு ஏற்பட்டு, தொற்று நோய் பரவியது.
அடுத்த கட்டமாக, மூவர் நகர் முதல் அடையாறு ஆறு வரை, 3,000 அடி துாரத்திற்கு 4.15 கோடி ரூபாய் செலவில் கால்வாய் கட்டி, அடையாறு ஆறு வரை எடுத்து செல்லாமல், கவுல்பஜார் காவல் உதவி மையத்தின் அருகே நிறுத்திவிட்டனர்.
அதற்கு மேல், ஏற்கனவே அங்குள்ள பழைய 2 அடி கால்வாய் வழியாக அடையாறு ஆற்றுக்கு தண்ணீர் செல்லும் என, அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
ஐந்து அடி அகலம், 5 அடி உயரம் உடைய கால்வாய் வழியாக வரும் தண்ணீர், 2 அடி கால்வாயில் செல்ல போதிய வழியில்லாததால், கவுல்பஜார் ஊராட்சி வெள்ளத்தில் மூழ்கும் என, அப்பகுதி மக்கள் குற்றச்சாட்டு தெரிவித்தனர்
மின் கம்பங்களை அகற்றுவதில் மின் வாரியம் மெத்தனம், சீரமைப்பு பணிகளில் நெடுஞ்சாலைத் துறை அலட்சியம் குறித்து, புகாரும் தெரிவித்தனர்.
இந்நிலையில், கவுல்பஜார் காவல் உதவி மையத்தோடு நிற்கும் கால்வாயை, அடையாறு ஆறு வரை நீட்டிக்க, உடனடியாக திட்ட அறிக்கை தயார் செய்ய, பரங்கிமலை ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளுக்கு, செங்கல்பட்டு கலெக்டர் அருண்ராஜ் உத்தரவிட்டார்.

