/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
வளர்ச்சி பணிகளை விரைந்து முடிக்க உத்தரவு
/
வளர்ச்சி பணிகளை விரைந்து முடிக்க உத்தரவு
ADDED : ஆக 03, 2025 10:51 PM
செங்கல்பட்டு:உள்ளாட்சித்துறையில், நடைபெற்றுவரும் வளர்ச்சி பணிகளை, விரைவாக முடிக்க, அதிகாரிகளுக்கு, கலெக்டர் சினேகா உத்தரவிட்டுள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் 359 ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சிகளில், அண்ணா மறுமலர்ச்சி திட்டம், தேசிய ஊரக வேலைவாய்ப்பு மற்றும் நபார்டு வங்கியின் நிதியுதவி திட்டத்தில் சாலைகள், பள்ளி கட்டடம், சிறுபால பணி உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடந்து வருகின்றன.
செங்கல்பட்டு கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், வளர்ச்சி பணிகள் குறித்த ஆய்வு கூட்டம், கலெக்டர் சினேகா தலைமையில் நடந்தது.
கூட்டத்தில், ஊரக வளர்ச்சித்துறையில் நடந்து வரும் பணிகளை, வடகிழக்கு பருவ மழைக்குள், விரைவாக முடிக்க வேண்டும் என, அதிகாரிகளுக்கு, கலெக்டர் உத்தரவிட்டார். இதில், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் லோகநாயகி, செயற்பொறியாளர் தணிகாசலம் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.