/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கோடையில் குடிநீர் விநியோகம் தடையின்றி வழங்க உத்தரவு
/
கோடையில் குடிநீர் விநியோகம் தடையின்றி வழங்க உத்தரவு
கோடையில் குடிநீர் விநியோகம் தடையின்றி வழங்க உத்தரவு
கோடையில் குடிநீர் விநியோகம் தடையின்றி வழங்க உத்தரவு
ADDED : ஏப் 15, 2025 06:58 PM
செங்கல்பட்டு:செங்கல்பட்டு மாவட்டத்தில், கோடை வெயில் காலங்களில், மக்களுக்கு குடிநீர் வினியோகம் தடையின்றி வழங்க வேண்டும் என, அதிகாரிகளுக்கு, மாவட்ட வருவாய் அலுவலர் கணேஷ்குமார் உத்தரவிட்டுள்ளார்.
செங்கல்பட்டு மாவட்ட பேரிடர் மேலாண்மை திட்டம் சார்பில், மாநில பேரிடரான வெப்ப அலையால் ஏற்படும் பாதிப்பு, தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம், கலெக்டர் கூட்ட அரங்கில், மாவட்ட வருவாய் அலுவலர் கணேஷ்குமார் தலைமையில் நேற்று நடந்தது.
சப்- கலெக்டர் மாலதி ஹெலன் உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில், வெயிலின் தாக்கம் அதிகம் ஏற்படும் சூழல் உள்ளதால் தாம்பரம் மாநகராட்சி, செங்கல்பட்டு, மதுராந்தகம், மறைமலைநகர், நந்திவரம் - கூடுவாஞ்சேரி, மாமல்லபுரம் ஆகிய நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகள், ஊராட்சி பகுதிகளில், மக்களுக்கு தங்கு தடையின்றி குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும்.
பேருந்து நிலையம் மற்றும் மக்கள் அதிகம் கூடும் பகுதியில், தண்ணீர் பந்தல் அமைக்க வேண்டும்.
அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை மற்றும் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை ஆரம்ப சுகாதார நிலையங்களில், 'ஓ.ஆர்.எஸ்., பவுடர்' இருப்பு வைத்திருக்க வேண்டும்.
தனியார் நிறுவனங்கள், கட்டுமான தொழில் உள்ளிட்ட பல்வேறு தொழில்களில் ஈடுபடும் தொழிலாளர்கள் நலன் குறித்து, தொழிலாளர் நலத்துறையினர் கண்காணிக்க வேண்டும்.
இத்துறையினர் செயல்படுத்தும் பணிகளை, வருவாய்த் துறையினர் ஒருங்கிணைத்து செயல்பட வேண்டும் என, மாவட்ட வருவாய் அலுவலர் உத்தரவிட்டார்.