/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
சித்திரை முழு நிலவு விழா அதிகாரிகளுக்கு உத்தரவு
/
சித்திரை முழு நிலவு விழா அதிகாரிகளுக்கு உத்தரவு
ADDED : மே 02, 2025 01:26 AM
செங்கல்பட்டு:மாமல்லபுரம் அடுத்த திருவிடந்தை பகுதியில், வன்னியர் சங்கம் சார்பில், சித்திரை முழு நிலவு வன்னியர் இளைஞர் பெருவிழா மாநாடு, வரும் 11ம் தேதி நடக்கிறது. இந்த மாநாட்டில், பல்வேறு மாவட்டங்களில் இருந்து கட்சியினர் கலந்துகொள்ள வருவர்.
இதனால், பாதுகாப்பு முன்னெச்சரிக்கை தொடர்பான ஆய்வுக் கூட்டம், செங்கல்பட்டு கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், கலெக்டர் அருண்ராஜ் தலைமையில் சமீபத்தில் நடந்தது.
இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் விபரம்:
செங்கல்பட்டு மாவட்டத்தில் பரனுார், அச்சிறுபாக்கம் அடுத்த சுங்கச்சாவடிகள், பாலுார் - செங்கல்பட்டு, சேந்தமங்கலம் - தெள்ளிமேடு, ரெட்டிபாளையம் - சோத்துப்பாக்கம், நெல்வாய் - புக்கத்துறை.
செங்கல்பட்டு - திருக்கழுக்குன்றம், திருக்கழுக்குன்றம் - பூஞ்சேரி, பூஞ்சேரி- மாமல்லபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள பல்வேறு அரசியில் கட்சிகளின் பதாகைகளை, உள்ளாட்சி அமைப்புகளின் அலுவலர்கள் அகற்ற வேண்டும்.
மாநாடு நடைபெறும் இடம் மற்றும் முக்கிய இடங்களில், செங்கல்பட்டு சப்- கலெக்டர், மதுராந்தகம் வருவாய் கோட்டாட்சியர் தலைமையில், குழுவினர் கண்காணிக்க வேணடும்.
மாநாடு நடைபெறும் இடத்தில், மருத்துவ வசதி மற்றும் தீயணைப்பு வசதிகள் ஏற்படுத்த வேண்டும் உள்ளிட்ட ஆலோசனை நடத்தப்பட்டது.
மாநாட்டின் போது, காவல் துறை மற்றும் அனைத்து துறையினர் இணைந்து செயல்பட வேண்டும் என, கலெக்டர் உத்தரவிட்டார்.