/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
திருக்கழுக்குன்றம் விவசாயிகளுக்கு மானியத்தில் நெல், மணிலா விதை
/
திருக்கழுக்குன்றம் விவசாயிகளுக்கு மானியத்தில் நெல், மணிலா விதை
திருக்கழுக்குன்றம் விவசாயிகளுக்கு மானியத்தில் நெல், மணிலா விதை
திருக்கழுக்குன்றம் விவசாயிகளுக்கு மானியத்தில் நெல், மணிலா விதை
ADDED : நவ 23, 2024 01:34 AM
திருக்கழுக்குன்றம்:திருக்கழுக்குன்றம்வட்டார விவசாயிகள்,அரசின் மானியத்தில் நெல்மற்றும் மணிலா விதைகளை வாங்க, வேளாண்மை விரிவாக்க மையங்களை அணுகலாம் என, வேளாண் உதவி இயக்குனர் ஜெய ராமன் அறிவித்துள்ளார்.
அவர் கூறியதாவது:
தேசிய வேளாண்மை வளர்ச்சித் திட்டம் மற்றும்விதை கிராம திட்டம் ஆகியவற்றின்கீழ், சம்பா மற்றும் நவரை ஆகிய பருவத்திற்கேற்ற, கோ51, எம்.டி.யூ., - 1010, என்.எல்.ஆர்.,- 34449, ஏ.டி.டி., - 57ஆகிய நெல் ரகங்களில் சான்று பெற்ற நெல் விதைகள், 50 சதவீத மானியத்தில் விவசாயிகளுக்கு வழங்கப்படுகின்றன.
கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி, மாநில வேளாண் வளர்ச்சி, உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு ஆகிய திட்டங்களின்கீழ், வி.பி.என்.,- 8, வி.பி.என்.,- 11 ஆகிய ரக உளுந்து விதைகளும், மானிய விலையில் வழங்கப்படுகின்றன.
மேலும், திரவ உயிர் உரங்கள், நுண்ணுாட்ட கலவைகள், உயிரியல் கட்டுப்பாட்டு டி.விரிடி, சூடோமோனஸ், ஜிப்சம், ஜிங்க் சல்பேட் ஆகியவையும், மானிய விலையில் வழங்கப்படுகின்றன.
விவசாயிகள், பட்டா, சிட்டா, அடங்கல், ஆதார் எண் ஆகியவற்றுடன், திருக்கழுக்குன்றம், நெரும்பூர் வேளாண் விரிவாக்க மையங்களை அணுகி, அப்பொருட்களை பெற்றுக் கொள்ளலாம்.
பணமில்லா பரிவர்த் தனையில் மட்டுமே பணம் பெறப்படும். இது தொடர்பாக, அந்தந்த பகுதி உதவி வேளாண்மை அலுவலரை தொடர்புகொள்ளலாம்.