/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மேட்டுப்பாளையம் பகுதியில் மழையால் நெற்பயிர்கள் சேதம்
/
மேட்டுப்பாளையம் பகுதியில் மழையால் நெற்பயிர்கள் சேதம்
மேட்டுப்பாளையம் பகுதியில் மழையால் நெற்பயிர்கள் சேதம்
மேட்டுப்பாளையம் பகுதியில் மழையால் நெற்பயிர்கள் சேதம்
ADDED : டிச 14, 2024 11:41 PM

அச்சிறுபாக்கம்:செங்கல்பட்டு மாவட்டம், அச்சிறுபாக்கம் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஊராட்சிகளில், அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள், வடகிழக்கு பருவமழையால் சேதமடைந்து உள்ளன.
அச்சிறுபாக்கம் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஒரத்தி, ராமாபுரம், மேட்டுப்பாளையம், கீழ் அத்திவாக்கம், வடமணிப்பாக்கம், களத்துார், ஊனமலை, முருங்கை, ஆத்துார், தொழுப்பேடு உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கிராம பகுதிகளில், கிணற்று பாசனத்தின் வாயிலாக பயிரிடப்பட்ட நெற்பயிர்கள், அறுவடைக்கு தயாராக இருந்தன.
கடந்த சில நாட்களாக பெய்த பருவமழையின் காரணமாக, ஏரிகளில் நீர் நிரம்பி, கலங்கல் வழியாக உபரிநீர் வெளியேறியது.
இதில், கலங்கல் நீர் செல்லும் ஆற்றின் கரைகள், ஓடை பகுதிகளில் உடைப்பு மற்றும் நிலப்பரப்பில் இருந்து திரண்ட வெள்ள நீர், பயிர்களை மூழ்கடித்தவாறு சென்றதால், நெற்பயிர்கள் நீரில் மூழ்கின.
இதனால், அறுவடை செய்ய முடியாமல், பயிர்கள் முளைப்பு கட்டி உள்ளன. இதனால், விவசாயிகள் செய்வதறியாமல் வேதனை அடைந்துள்ளனர்.
எனவே வருவாய், வேளாண்மை மற்றும் தோட்டக்கலை துறை சார்ந்த அதிகாரிகள், பயிர் பாதிப்புகளை உடனடியாக ஆய்வு செய்து, இழப்பீடு வழங்க வேண்டும் என, கோரிக்கை விடுத்துள்ளனர்.