/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
நெல் கொள்முதல் நிலையம் வில்லியம்பாக்கத்தில் வேண்டும்
/
நெல் கொள்முதல் நிலையம் வில்லியம்பாக்கத்தில் வேண்டும்
நெல் கொள்முதல் நிலையம் வில்லியம்பாக்கத்தில் வேண்டும்
நெல் கொள்முதல் நிலையம் வில்லியம்பாக்கத்தில் வேண்டும்
ADDED : ஜூன் 07, 2025 10:33 PM
வில்லியம்பாக்கம்:செங்கல்பட்டு அடுத்த, வில்லியம்பாக்கம், பாலுார், ஆத்துார் உள்ளிட்ட பகுதிகளில், கிணறு, ஆழ்த்துளை கிணறு மற்றும் ஏரி பாசனம் மூலம், விவசாய நிலங்களில், நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.
இங்கு, அறுவடை செய்யும் நெல், தற்காலிக அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்து வருகின்றனர்.
விவசாயிகள் நலன்கருதி, அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் நிரந்தரமாக அமைக்க வேண்டும் என, விவசாயிகள் நலன்காக்கும் கூட்டங்களில் விவசாயிகள், கடந்த சில ஆண்டுகளாக வலியுறுத்தி வருகின்றனர்.
வில்லியம்பாக்கம் பகுதியில், அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் கட்ட, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம் மற்றும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.