/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
சொர்ணவாரி பருவத்திற்கு நெல் கொள்முதல் நிலையங்கள் ரெடி முறைகேடில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை
/
சொர்ணவாரி பருவத்திற்கு நெல் கொள்முதல் நிலையங்கள் ரெடி முறைகேடில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை
சொர்ணவாரி பருவத்திற்கு நெல் கொள்முதல் நிலையங்கள் ரெடி முறைகேடில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை
சொர்ணவாரி பருவத்திற்கு நெல் கொள்முதல் நிலையங்கள் ரெடி முறைகேடில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை
ADDED : ஆக 29, 2025 11:56 PM
செங்கல்பட்டு சொர்ணவாரி பருவத்தில் பயிரிடப்பட்ட நெல் அறுவடைக்கு வந்துள்ளதால், செங்கல்பட்டு மாவட்டத்தில், 46 இடங்களில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் இன்று திறக்கப்பட உள்ளன.
செங்கல்பட்டு மாவட்டத்தில், செங்கல்பட்டு, மதுராந்தகம், செய்யூர், திருக்கழுக்குன்றம், திருப்போரூர், தாம்பரம், பல்லாவரம் உள்ளிட்ட தாலுகாக்கள் உள்ளன. மாவட்டத்தில் 1.86 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் உள்ளன. இதில், மதுராந்தகம், செய்யூர், திருக்கழுக்குன்றம் ஆகிய தாலுகாவில், அதிகளவில், விவசாயம் சாகுபடி செய்யப்படுகிறது.
சொர்ணவாரி பருவத்தில், 35 ஆயிரத்து 68 ஏக்கருக்கு நெல் நடவு செய்யப்பட்டுள்ளது. ஒரு சில இடங்களில் அறுவடைக்கு தயாராக உள்ளன.
மத்திய அரசின் பரவலாக்கப்பட்ட நெல் கொள்முதல் திட்டத்தின் கீழ், கே.எம்.எஸ்., 2025- -26 பருவத்தில், சொர்ணவாரி பருவத்தில், நெல் கொள்முதல் செய்ய, அனுமதி வழங்கியது. அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் துவக்கவும், விவசாயிகளிடம் இருந்து, நெல் கொள்முதல் செய்ய, முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார்.
46 இடங்களில், நெல் கொள்முதல் நிலையம் திறக்க அனுமதி வழங்கி, கலெக்டர் சினேகா, உத்தரவிட்டார். இதைத்தெதடர்ந்து, மாவட்டத்தில், திருக்கழுக்குன்றம் அடுத்த, நத்தம் கரியச்சேரி கிராமத்தில், நெல் கொள்முதல் நிலையத்தை, சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் அமைச்சர் அன்பரசன், இன்று திறந்து வைக்கிறார். பிற இடங்களிலும் நெல் கொள்முதல் நிலையங்கள் இன்று முதல் செயல்படும்.
நெல் கொள்முதல் நிலையங்களில், எவ்வித முறைகேட்டிற்கும், இடமளிக்காத வகையில் பணிபுரிய வேண்டும். குறைபாடுகள் கண்டறியப்பட்டால், ஒழுங்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். கொள்முதல் செய்யப்பட்ட நெல்லை உடனுக்குடன், சம்பந்தப்பட்ட கிடங்கு அல்லது நவீன அரிசி ஆலைகளுக்கு அனுப்பி வைக்க, முதுநிலை மண்டல மேலாளர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
.