/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மதுராந்தகம் பகுதியில் மழை காரணமாக நெல் கொள்முதல் செய்யும் பணி நிறுத்தம்
/
மதுராந்தகம் பகுதியில் மழை காரணமாக நெல் கொள்முதல் செய்யும் பணி நிறுத்தம்
மதுராந்தகம் பகுதியில் மழை காரணமாக நெல் கொள்முதல் செய்யும் பணி நிறுத்தம்
மதுராந்தகம் பகுதியில் மழை காரணமாக நெல் கொள்முதல் செய்யும் பணி நிறுத்தம்
ADDED : ஏப் 04, 2025 01:46 AM

மதுராந்தகம்:மதுராந்தகம் வட்டாரத்தில் மழை பெய்து வரும் நிலையில், அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் கொள்முதல் செய்யும் பணி நிறுத்தப்பட்டு உள்ளது. மேலும், நெல் மூட்டைகளை கிடங்கிற்கு அனுப்பி வைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
செங்கல்பட்டு மாவட்டத்தில் சம்பா பருவத்திற்கு, தமிழ்நாடு வாணிபக் கழகத்தின் வாயிலாக, அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் துவக்கப்பட்டு உள்ளன.
செங்கல்பட்டு மாவட்டத்தில், 1.60 லட்சம் ஏக்கருக்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் உள்ளன.
இதில் மதுராந்தகம், செய்யூர், திருக்கழுக்குன்றம் ஆகிய தாலுகாக்களில், அதிக அளவில் நெல் சாகுபடி செய்யப்படுகிறது.
65,000 ஏக்கருக்கும் மேற்பட்ட நிலப்பரப்பில், சம்பா பருவத்தில் நெல் நடவு செய்யப்பட்டு, அறுவடை பணிகள் நடந்து வருகின்றன.
* நெல் கொள்முதல் நிலையம் திறப்பு
மத்திய அரசு சார்பில் 27 நெல் கொள்முதல் நிலையங்களும், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் சார்பாக, 91 நெல் கொள்முதல் நிலையங்களும் செயல்பட்டு வருகின்றன.
அந்த வகையில், பூதுார் -- படாளம் மாநில நெடுஞ்சாலை ஓரம், பூதுார் பகுதியில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் வாயிலாக, நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டு, கொள்முதல் செய்யப்பட்டு வந்தது. தற்போது, மழை பெய்து வருவதால், நெல் கொள்முதல் செய்வது நிறுத்தப்பட்டு உள்ளது.
இதுகுறித்து, விவசாயிகள் கூறியதாவது:
செங்கல்பட்டு மாவட்டம், படாளத்தில் திறக்கப்பட்ட நெல் கொள்முதல் நிலையம், அரசியல் கட்சிகளின் தலையீட்டால், இரண்டு முறை பூஜை போடப்பட்டது.
அதனால், நெல் கொள்முதல் செய்ய காலதாமதம் ஏற்பட்டது.
தற்போது, நேற்று முதல் கோடை மழை பெய்து வருவதால், நெல்லை பாதுகாப்பதில் பெரும் சிரமம் ஏற்படுகிறது.
கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை குடோனுக்கு அனுப்பும் பணியில், அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
ஈரப்பதம் உள்ள நெல்லையும், கொள்முதல் செய்ய வேண்டும்.
நெல்லை பாதுகாக்கும் வகையில், தேவை உள்ள விவசாயிகளுக்குத் தேவையான தார்ப்பாய்களை, அரசு உடனடியாக வழங்க வேண்டும்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.