/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
விஜய வரதராஜ பெருமாள் கோவிலில் பாலாலய விழா
/
விஜய வரதராஜ பெருமாள் கோவிலில் பாலாலய விழா
ADDED : டிச 15, 2024 10:48 PM
அச்சிறுபாக்கம்:பாபுராயன் பேட்டையில் உள்ள தேசிய பாரம்பரிய சின்னமான விஜய வரதராஜ பெருமாள் கோவிலை சீரமைக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இதையடுத்து, ஹிந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, கோவில் உட்பிரகார வளாகத்தில் இருந்த முட்புதர்கள் மற்றும் செடி கொடிகளை அகற்றினார்.
இக்கோவிலில், 7 கோடி ரூபாய் மதிப்பில் விஜய வரதராஜ பெருமாள் கோவில் சன்னிதி சீரமைக்க திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு, அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
ராஜகோபுரம், தாயார் சன்னிதி, குளம் மற்றும் சுற்றுச்சுவர் சீரமைப்பு உள்ளிட்ட பல்வேறு திருப்பணிகள் மேற்கொள்ள திட்டம் தயார் செய்யப்படும் பணி நடந்து வருகிறது.
நேற்று, கோவிலில் இதற்கான பாலாலயம் நிகழ்வு நடந்தது. கோவில் வளாகத்தில் கலசங்கள் அமைத்து சிறப்பு அர்ச்சனை மற்றும் ஆராதனைகள் நடந்தன.
அறநிலையத்துறை துணை ஆணையர் ஜெயா, உதவியாளர் ராஜலட்சுமி, கோவில் செயல் அலுவலர் தமிழரசி மற்றும் அச்சிறுபாக்கம் ஒன்றிய குழு தலைவர், பாபுராயன் பேட்டை ஊராட்சி மன்ற தலைவர் நவநீதம் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

