/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பாளையூர் சாலை சீரமைப்பு பணி துவக்கம்
/
பாளையூர் சாலை சீரமைப்பு பணி துவக்கம்
ADDED : நவ 24, 2025 02:45 AM
செய்யூர்: பல ஆண்டுகளாக பழுதடைந்து இருந்த, பாளையூர் சாலையை, 1.10 கோடி ரூபாயில் சீரமைக்கும் பணிகள் துவங்கி உள்ளன.
செய்யூர் அருகே பாளையூர் கிராமத்தில் இருந்து தண்ணீர்பந்தல் வழியாக, செய்யூர் செல்லும் தார்ச்சாலை உள்ளது. பாளையூர், ஆற்காடு, அமைந்தங்கரணை உள்ளிட்ட ஐந்திற்கும் மேற்பட்ட கிராம மக்கள், இந்த சாலையைப் பயன்படுத்தி வருகின்றனர்.
கடந்த 10 ஆண்டுகளாக, சித்தார்க்காடு சாலை சந்திப்பு மற்றும் பாளையூர் இடையே, 1.45 கி.மீ., துாரம் இச்சாலை கடுமையாக சேதமடைந்து, ஜல்லிகள் பெயர்ந்து மோசமான நிலையில் இருந்தது.
இதனால், வாகன ஓட்டிகள் தடுமாறி விழுந்து காயமடைந்து வந்தனர். இதனால், இந்த சாலையை சீரமைக்க வேண்டும் என, தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்நிலையில், ஊரக வளர்ச்சித் துறை சார்பாக, முதல்வர் கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 1.10 கோடி ரூபாய் மதிப்பில், இச்சாலையை சீரமைக்கும் பணிகள் துவங்கி உள்ளன.

