ADDED : அக் 19, 2024 01:49 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்போரூ:திருப்போரூர் அடுத்த சிறுதாவூர் அரசு உயர்நிலைப்பள்ளியின் சுற்றுச்சூழல் மன்றம் சார்பில், பனை விதை நடும் நிகழ்ச்சி, நேற்று நடந்தது.
இதில், 50க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் பங்கேற்று, அப்பகுதியில் உள்ள பெரிய ஏரிக்கரை அருகே, முதற்கட்டமாக, 200 பனை விதைகளை நட்டனர். மேலும், 1000 பனை விதைகள் நடவு செய்ய முடிவு செய்துள்ளனர்.
நிகழ்ச்சியில், பள்ளி தமைமை ஆசிரியை, ஆசிரியர்கள், மற்றும் தன்னார்வலர்கள் பங்கேற்றனர்.

