sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளை பராமரிப்பதில் ஊராட்சிகள்... அலட்சியம்!:குளோரின் கலக்காத குடிநீரால் மக்களுக்கு காய்ச்சல் பாதிப்பு

/

மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளை பராமரிப்பதில் ஊராட்சிகள்... அலட்சியம்!:குளோரின் கலக்காத குடிநீரால் மக்களுக்கு காய்ச்சல் பாதிப்பு

மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளை பராமரிப்பதில் ஊராட்சிகள்... அலட்சியம்!:குளோரின் கலக்காத குடிநீரால் மக்களுக்கு காய்ச்சல் பாதிப்பு

மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளை பராமரிப்பதில் ஊராட்சிகள்... அலட்சியம்!:குளோரின் கலக்காத குடிநீரால் மக்களுக்கு காய்ச்சல் பாதிப்பு


ADDED : செப் 14, 2025 02:03 AM

Google News

ADDED : செப் 14, 2025 02:03 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செங்கல்பட்டு:செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள ஊராட்சிகளில், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளை சுத்தம் செய்யாமல் குடிநீர் ஏற்றி, மக்களுக்கு வினியோகம் செய்யப்படுவதாக, சமூக ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர். உள்ளாட்சி நிர்வாகங்களின் அலட்சியத்தால், காய்ச்சல் உள்ளிட்ட பாதிப்புகளால் மக்கள் அவதிப்பட்டு வருவதாகவும் அதிருப்தி தெரிவித்துள்ளனர். செங்கல்பட்டு மாவட்டத்தில் அச்சிறுபாக்கம், மதுராந்தகம், சித்தாமூர், லத்துார், திருக்கழுக்குன்றம், திருப்போரூர், காட்டாங்கொளத்துார், புனிததோமையார்மலை ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில், 359 ஊராட்சிகள் உள்ளன.

இந்த ஊராட்சிகளில் கிணறுகள், ஆழ்துளைக் கிணறுகள், கூட்டுக் குடிநீர் திட்டம் மூலமாக மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளில் தண்ணீர் ஏற்றப்படுகிறது. அதன் பின், தினமும் 'குளோரின்' பவுடர் கலந்து, குழாய்கள் மூலமாக மக்களுக்கு வினியோகம் செய்ய வேண்டும்.

நியமனம் ஊராட்சிகளில், ஒரு நாளைக்கு இரண்டு முறை குடிநீர் வினியோகம் செய்தாலும், குளோரின் கலந்து வினியோகம் செய்ய வேண்டும். குடிநீர் வினியோகம் செய்வதற்கு நீர்த்தேக்க தொட்டியை இயக்குபவர், தொட்டியை துாய்மையாக பராமரிக்க துாய்மை பணியாளர் ஒருவர் என, ஊராட்சிகளில் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

ஊராட்சிகளில், குடிநீரில் குளோரின் கலந்து வினியோகம் செய்யப்படுகிறதா என, சுகாதாரத்துறை ஆய்வாளர்கள் ஆய்வு செய்ய வேண்டும்.

இதுமட்டுமின்றி, மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளை, 15 நாளுக்கு ஒரு முறை, ஊராட்சி நிர்வாகம் சுத் தம் செய்ய வேண்டும்.

சுத்தம் செய்த நாள், சுத்தம் செய்யப்பட வேண்டிய நாள் ஆகியவற்றை, மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி பகுதியில் எழுத வேண்டும். மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் பகுதியில் செடிகள் இல்லாமல், ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் ஆய்வு செய்வதற்கு வசதியாக இடம், துாய்மையாக இருக்க வேண்டும்.

ஆனால், செங்கல்பட்டு மாவட்டத்தில் மேலமையூர், புலிப்பாக்கம், ஆத்துார், நென்மேலி, தென்மேல்பாக்கம், வல்லிபுரம், மெய்யூர், மாமண்டூர், சிதண்டிமண்டபம், செய்யூர், நெரும்பூர், ஊரப்பாக்கம் உள்ளிட்ட பெரும்பாலான ஊராட்சி நிர்வாகத்தினர், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளை சுத்தம் செய்யாமல் தண்ணீர் ஏற்றி, மக்களுக்கு வினியோகம் செய்து வருகின்றனர்.

வினியோகம் ஒரு சில ஊராட்சிகளில் மட்டும், பாதுகாக்கப்பட்ட குடிநீர் வினியோகம் செய்கின்றனர்.

இந்நிலையில், ஊராட்சிகளில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளில் ஏற்றப்படும் குடிநீரில் குளோரின் கலந்து வினியோகம் செய்யப்படுகிறதா என்பதை, சுகாதார ஆய்வாளர்கள் ஆய்வு செய்வதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தற்போது, அடிக்கடி மழை பெய்து வருகிறது. குளோரின் கலந்து பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்காததால், தண்ணீரால் பரவக்கூடிய காய்ச்சல் மற்றும் வயிற்றுப்போக்கு உள்ளிட்ட பல்வேறு தொற்று நோய்கள் ஏற்பட்டு, மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர்.

தற்போது அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் தனியார் மருத்துவமனைகளில், பொதுமக்கள் காய்ச்சல், சளித் தொல்லை உள்ளிட்ட பாதிப்புகளுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

எனவே, பொதுமக்களுக்கு, 'குளோரின்' கலந்த பாதுகாப்பான குடிநீர் வழங்க வேண்டும். மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளை முறையாக பராமரிக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் மூலமாக குடிநீர் வினியோகம் செய்யும் போது, 'குளோரின்' கலந்து குடிநீர் வினியோகம் செய்யவில்லை. குடிநீர் தொட்டிகளை சுத்தம் செய்வதில்லை. குடிநீர் பராமரிப்பில், ஊராட்சி நிர்வாகங்கள் முறையாக செயல்படவில்லை. அனைத்து ஊராட்சிகளில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளை, அதிகாரிகள் ஆய்வு செய்து, நடவடிக்கை எடுக்க வேண்டும். - சி.எம். சுரேஷ், செங்கல்பட்டு







      Dinamalar
      Follow us