/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பங்குனி உத்திர உற்சவம் மாமல்லையில் துவக்கம்
/
பங்குனி உத்திர உற்சவம் மாமல்லையில் துவக்கம்
ADDED : மார் 15, 2024 09:44 PM
மாமல்லபுரம்:மாமல்லபுரம், ஸ்தலசயன பெருமாள் கோவில், வைணவ 108 திவ்ய தேசங்களில், 63வதாக விளங்குகிறது. ஸ்தலசயன பெருமாள், நிலமங்கை தாயார், பிற சுவாமியர் வீற்றுள்ளனர்.
நிலமங்கை தாயாருக்கு, பங்குனி உத்திர உற்சவம், 10 நாட்கள் நடைபெறும். கடந்த இரண்டு ஆண்டுகளாக, கோவில் திருப்பணிகள் நடந்ததால், உற்சவங்கள் நடத்தப்படவில்லை.கடந்த பிப்., 1ம் தேதி, மஹா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டதைத் தொடர்ந்து, மீண்டும் உற்சவங்கள் துவக்கப்பட்டுள்ளன.
அதன்படி, 10 நாட்கள் உற்சவமான பங்குனி உத்திர உற்சவம், இன்று துவங்கி, வரும் 25ம் தேதி வரை நடக்கிறது. தினமும் மாலை, திருமஞ்சன வழிபாடு நடந்து, கோவிலுக்குள் தாயார் உலா சென்று, ஊஞ்சல் சேவையாற்றுகிறார். இறுதி நாளில், திருமஞ்சனம், ஸ்ரீசுக்த ஹோமம், ஸ்தலசயன பெருமாள் மாப்பிள்ளை அழைப்பாக வீதியுலா, இரவு திருக்கல்யாணம் நடைபெறும்.
கும்பாபிஷேகத்தை தொடர்ந்து நடந்து வந்த மண்டலாபிஷேகம், பங்குனி உத்திர உற்சவம் காரணமாக, நேற்றுடன் நிறைவுபெற்றது.

