/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
தனியார் கேபிள் அமைத்த இடத்தில் பள்ளத்தை சரியாக மூடாததால் பீதி
/
தனியார் கேபிள் அமைத்த இடத்தில் பள்ளத்தை சரியாக மூடாததால் பீதி
தனியார் கேபிள் அமைத்த இடத்தில் பள்ளத்தை சரியாக மூடாததால் பீதி
தனியார் கேபிள் அமைத்த இடத்தில் பள்ளத்தை சரியாக மூடாததால் பீதி
ADDED : மே 09, 2025 02:39 AM

மறைமலைநகர்:திருச்சி - - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் மறைமலைநகர் அடுத்த 'டான்சி' சர்வீஸ் சாலையை சாமியார் கேட், பேரமனுார், தர்னீஸ் கொயர், திருக்கச்சூர் உள்ளிட்ட பகுதி மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
மேலும் மறைமலைநகர் சிப்காட் பகுதியில் உள்ள தொழிற்சாலைகளுக்குச் செல்லும் வாகன ஓட்டிகளும், இந்த சாலையில் சென்று வருகின்றனர்.
இந்த சாலையில், பூமிக்கு அடியில் தனியார் 'கேபிள்'கள் செல்கின்றன. இந்த இணைப்புகளை பராமரிக்கும் பணி கடந்த சில மாதங்களுக்கு முன், இந்த சாலையில் நடைபெற்றது.
இதற்காக, சர்வீஸ் சாலையில் 5 அடி அகலத்தில் பெரிய பள்ளம்,'பொக்லைன்' இயந்திரம் வாயிலாக தோண்டப்பட்டு பணிகள் நடைபெற்றன.
இப்பணிகள் நிறைவடைந்த நிலையில், பள்ளம் சிமென்ட் கான்கிரீட் கொண்டு மூடப்பட்டது. தற்போது, இந்த கான்கிரீட் பெயர்ந்து, பெரிய அளவில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால், வேகமாக வரும் வாகன ஓட்டிகள் தடுமாறி வருகின்றனர்.
சிறு, சிறு விபத்துகளும் ஏற்பட்டு வருகின்றன.
எனவே, இந்த பள்ளத்தை சீரமைக்க, நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

