/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
அனுமந்தபுரம் சாலையில் பள்ளம் தொடரும் விபத்துகளால் பீதி
/
அனுமந்தபுரம் சாலையில் பள்ளம் தொடரும் விபத்துகளால் பீதி
அனுமந்தபுரம் சாலையில் பள்ளம் தொடரும் விபத்துகளால் பீதி
அனுமந்தபுரம் சாலையில் பள்ளம் தொடரும் விபத்துகளால் பீதி
ADDED : செப் 07, 2025 12:29 AM

மறைமலை நகர்:அனுமந்தபுரம் சாலையில் உள்ள பள்ளங்களால் தினமும் இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி வருகின்றனர்.
சிங்கபெருமாள் கோவில் -அனுமந்தபுரம் சாலை 9 கி.மீ., உடையது. இந்த சாலை திருப்போரூர் -- செங்கல்பட்டு சாலையின் இணைப்பு சாலை. இந்த சாலையை பயன்படுத்தி 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் சிங்கபெருமாள் கோவில், செங்கல்பட்டு, தாம்பரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு தங்களின் அடிப்படை தேவைகளுக்கு சென்று வருகின்றனர்.
இந்த சாலையில் தென்மேல்பாக்கம், அனுமந்தபுரம் உள்ளிட்ட பகுதிகளில் சாலை குண்டும் குழியுமாக சேதமடைந்து உள்ளதால் இந்த வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் தடுமாறி கீழே விழுந்து விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன.
இது குறித்து வாகன ஓட்டிகள் கூறியதாவது:
இந்த சாலையில் கடந்த 29ம் தேதி நடைபெற்ற விபத்தில் சென்னையை சேர்ந்த முதியவர் ஒருவர் உயிரிழந்தார். கடந்த 4ம் தேதி நடைபெற்ற விபத்தில் அனுமந்தபுரம் பகுதியை சேர்ந்த 16 வயது சிறுவன் உயிரிழந்தார். நேற்று முன்தினம் இருசக்கர வாகனத்தில் சென்ற கூலி தொழிலாளி இந்த பள்ளத்தில் கீழே விழுந்து காலில் முறிவு ஏற்பட்டது.
இந்த சாலை காப்புகாடுகளுக்கு நடுவே உள்ளதால் சாலையை சீரமைக்க வனத்துறை முட்டுக்கட்டையாக உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.