/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
செவிலியர் விடுதியில் செடிகள் விஷ ஜந்துக்கள் நடமாட்டத்தால் பீதி
/
செவிலியர் விடுதியில் செடிகள் விஷ ஜந்துக்கள் நடமாட்டத்தால் பீதி
செவிலியர் விடுதியில் செடிகள் விஷ ஜந்துக்கள் நடமாட்டத்தால் பீதி
செவிலியர் விடுதியில் செடிகள் விஷ ஜந்துக்கள் நடமாட்டத்தால் பீதி
ADDED : டிச 19, 2024 11:53 PM

செங்கல்பட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில், செவிலியர் விடுதி பகுதியில் செடிகள் வளர்ந்து, விஷ ஜந்துக்கள் உலவுவதால், மாணவியர் பீதியில் உள்ளனர்.
செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை வளாகத்தில், 1962ம் ஆண்டு கட்டப்பட்ட கட்டடத்தில், அரசு செவிலியர் கல்லுாரி மாணவியர் விடுதி உள்ளது.
இங்கு, செவிலியர் கல்லுாரி மாணவியர் 100க்கும் மேற்பட்டோர் தங்கி, படித்து வருகின்றனர்.
இந்த கட்டடம் அருகில், செடிகள் வளர்ந்து காடு போல் உள்ளதால் பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. இந்த விடுதியில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன், பாம்பு கடித்து மாணவி ஒருவர் இறந்தார்.
அதன் பின், விடுதி கட்டடம் முழுதும் பராமரிக்கப்பட்டது. அதன் பின் இந்த கட்டடங்களை, மருத்துவமனை நிர்வாகம் மற்றும் பொதுப்பணித் துறை அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை. இதனால் தற்போது, செவிலியர் மாணவர்கள் அச்சத்துடன் உள்ளனர்.
விடுதியில் உள்ள மாணவியருக்கு பாதிப்பு ஏற்படுவதற்கு முன், முட்புதரை அகற்றி, முறையாக பராமரிக்க வேண்டும்.
அத்துடன், விரைவில் புதிய கட்டடம் கட்டித்தர வேண்டுமென, கல்லுாரி முதல்வரிடம் மாணவியர் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த பிரச்னைகளுக்கு நிரந்தர தீர்வு காண வேண்டுமென, செவிலியர் மாணவியர் எதிர்பார்க்கின்றனர்.