/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
தடுப்பின்றி கால்வாய் கட்டுமான பணி தாம்பரம் - -சோமங்கலம் சாலையில் பீதி
/
தடுப்பின்றி கால்வாய் கட்டுமான பணி தாம்பரம் - -சோமங்கலம் சாலையில் பீதி
தடுப்பின்றி கால்வாய் கட்டுமான பணி தாம்பரம் - -சோமங்கலம் சாலையில் பீதி
தடுப்பின்றி கால்வாய் கட்டுமான பணி தாம்பரம் - -சோமங்கலம் சாலையில் பீதி
ADDED : அக் 07, 2024 02:08 AM

தாம்பரம்:தாம்பரம் - சோமங்கலம் சாலையை பயன்படுத்தி ஏராளமான வாகனங்கள் செல்கின்றன. மேலும், இச்சாலை சென்னை புறவழிச்சாலை மற்றும் வெளிவட்ட சாலையை இணைக்கும் வகையில் உள்ளது.
இதனால், இந்த சாலையில் வாகன போக்குவரத்து பல மடங்கு அதிகரித்துள்ளது.
இந்த சாலையோரம் பாப்பான் கால்வாய் மற்றும் அடையாறு ஆறு செல்கிறது. ஆண்டுதோறும் மழையின் போது, சாலையை ஒட்டிய நிலங்களில் வெள்ள நீர் தேங்கி, வடிய பல மாதங்களாகும்.
இதனால், அப்பகுதியில் மண் நெகிழ்வு தன்மையை இழந்ததால், சாலை உள்வாங்கி அடிக்கடி பள்ளம் ஏற்படுகிறது.
இதை தடுக்க, 1 கி.மீ., துாரத்திற்கு சாலையை அகலப்படுத்தி, கான்கிரீட் தடுப்பு சுவர் அமைக்கும் பணி, கடந்த ஆகஸ்டில் துவங்கி, தற்போது வரை நடந்து வருகிறது.
மேலும், பாப்பான் கால்வாயில் இருந்து அடையாறு கால்வாயில் தண்ணீர் செல்லும் வகையில், சாலையோரம் புதிய கால்வாய் கட்டுமான பணியும் நடக்கிறது.
இந்த பணியால் சாலை குறுகலாகி காலை, மாலை நேரங்களில், அப்பகுதியில் கடும் நெரிசல் ஏற்படுவதால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதிக்கு உள்ளாகின்றனர்.
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:
வடக்கிழக்கு பருவமழை துவங்க உள்ள நிலையில், கட்டுமான பணி மந்த கதியில் நடக்கிறது. கட்டுமான பணி நடக்கும் இடங்களில் சாலையோரம் போதிய தடுப்புகள் அமைக்கவில்லை.
இதனால், இந்த வழியே செல்லும் வாகனங்கள் பள்ளத்தில் கவிழ்ந்து, விபத்தில் சிக்கும் ஆபத்து உள்ளது. எனவே, போதிய தடுப்புகள் அமைத்து, பருவமழைக்கு முன் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.