/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
சதுரங்கப்பட்டினத்தில் வாகன நிறுத்தம் இழுபறிக்கு பின் ரூ.10 லட்சத்திற்கு ஏலம்
/
சதுரங்கப்பட்டினத்தில் வாகன நிறுத்தம் இழுபறிக்கு பின் ரூ.10 லட்சத்திற்கு ஏலம்
சதுரங்கப்பட்டினத்தில் வாகன நிறுத்தம் இழுபறிக்கு பின் ரூ.10 லட்சத்திற்கு ஏலம்
சதுரங்கப்பட்டினத்தில் வாகன நிறுத்தம் இழுபறிக்கு பின் ரூ.10 லட்சத்திற்கு ஏலம்
ADDED : நவ 10, 2024 07:25 PM
சதுரங்கப்பட்டினம்:கல்பாக்கம் அணுசக்தி தொழில் வளாகம் நுழைவாயில் அருகில், சதுரங்கப்பட்டினம் ஊராட்சி நிர்வாகத்திற்கு சொந்தமான இடம் உள்ளது.
அணுசக்தி துறை ஒப்பந்த நிறுவனங்களில் பணியாற்றும் கூலித் தொழிலாளர்கள், அவர்களின் இருசக்கர வாகனங்களை, ஊராட்சி இடத்தில் நிறுத்தி, அணுசக்தி வளாக பணிக்கு செல்கின்றனர். கார், கனரக வாகனங்களும் நிறுத்தப்படுகின்றன.
ஊராட்சி நிர்வாகம், அதன் வருவாய் கருதி, கடந்த 2022ல் கட்டண வாகன நிறுத்துமிடம் ஏற்படுத்த முடிவெடுத்தது. அதற்கான அனுமதியையும், ஊரக வளர்ச்சித் துறையிடம் பெற்றது. ஊராட்சி நிர்வாகமே, வாகன நிறுத்துமிட கட்டணம் வசூலிக்க திட்டமிட்டது.
பின், பொது ஏலத்தில் தனியார் குத்தகைக்கு அளிக்க ஏற்பாடு செய்தது. ஊராட்சித் தலைர் ரேவதியின் கணவர், அ.தி.மு.க., பிரமுகர் சாமிநாதனுடன், இதே பகுதி தி.மு.க., பிரமுகரான ஒன்றிய கவுன்சிலருக்கு, உள்ளாட்சித் தேர்தல் பகை இருப்பதாக கூறப்படுகிறது.
இதையடுத்து, தி.மு.க., பிரமுகரின் முட்டுக்கட்டையால், பொது ஏலம் நடத்தப்படுவது முடங்கியது. வட்டார வளர்ச்சி நிர்வாகத்தினரும், தி.மு.க., பிரமுகருக்கு ஆதரவாக செயல்பட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், ஊராட்சித் தலைவர், உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து, உத்தரவு பெற்று, கடந்த செப்., 27ம் தேதி ஏலம் நடத்தப்படும் என, அறிவிக்கப்பட்டது. மீண்டும் முட்டுக்கட்டை காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. தற்போது, பொது ஏலம் நடத்தி, தனியார் குத்தகைக்கு அளிக்கப்பட்டுள்ளது.
இருசக்கர வாகனத்திற்கு தலா 10 ரூபாய், காருக்கு தலா 50 ரூபாய், பிற கனரக வகைக்கேற்ப, 100 ரூபாய் முதல், 500 ரூபாய் வரை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, ஊராட்சி நிர்வாகத்தினர் கூறியதாவது:
கடந்த நவ., 2ம் தேதி முதல், அடுத்த ஆண்டு நவ., 1ம் தேதி வரை, வாகன நிறுத்துமிட கட்டணம் வசூலிக்க, அண்மையில் பொது ஏலம் நடத்தப்பட்டது. ஒன்பது பேர் பங்கேற்றனர்.
அதிகபட்சம் 7.20 லட்சம் ரூபாய்க்கு ஏலம் கோரியவருக்கு, குத்தகை அளிக்கப்பட்டுள்ளது. ஜி.எஸ்.டி., வரியுடன் சேர்த்து, 9.84 லட்சம் ரூபாய், ஊராட்சிக்கு வருவாய் கிடைத்தது.
இவ்வாறு நிர்வாகத்தினர் கூறினர்.