/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பகுதி நேர ரேஷன் கடை அகிலி காலனியில் திறப்பு
/
பகுதி நேர ரேஷன் கடை அகிலி காலனியில் திறப்பு
ADDED : நவ 23, 2024 01:00 AM

அச்சிறுபாக்கம்:அச்சிறுபாக்கம் ஒன்றியத்துக்கு உட்பட்டு, அகிலி ஊராட்சி உள்ளது. இந்த ஊராட்சிக்கு உட்பட்ட காலனி பகுதியில், 150க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்கள் வசித்து வருகின்றனர்.
இப்பகுதியினர், அரிசி, சர்க்கரை, கோதுமை, துவரம் பருப்பு உள்ளிட்ட ரேஷன் பொருட்களை வாங்கிச் செல்ல, 2 கி.மீ., துாரம் நடந்து சென்று, அகிலி கிராமப் பகுதியில் உள்ள நியாய விலை கடையில் பொருட்களை வாங்கி வந்தனர்.
இதனால், அகிலி காலனி பகுதியில், பகுதி நேர நியாய விலை கடை அமைத்து தரக்கோரி, துறை சார்ந்த அதிகாரிகளுக்குக் அப்பகுதிவாசிகள் தொடர்ந்து மனு அளித்து வந்தனர்.
இதன்படி, செண்டிவாக்கம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தின் வாயிலாக, பகுதி நேர நியாய விலை கடை கட்டடம் கட்டப்பட்டது.
நேற்று, ஊராட்சி தலைவி மகாலட்சுமி தலைமையில், பகுதி நேர நியாய விலைக் கடை கட்டடத்தை, அச்சிறுபாக்கம் ஒன்றிய குழு தலைவர் கண்ணன் திறந்து வைத்தார்.
இதில், ஊராட்சி செயலர், ஊராட்சி துணை தலைவர், வார்டு உறுப்பினர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.