sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

சிக்னல் கோளாறு, மின்வடம் துண்டிப்பால் மின்சார ரயில் சேவையில் தொடரும் பாதிப்பு தெற்கு ரயில்வே மெத்தனம் காட்டுவதாக பயணியர் குற்றச்சாட்டு

/

சிக்னல் கோளாறு, மின்வடம் துண்டிப்பால் மின்சார ரயில் சேவையில் தொடரும் பாதிப்பு தெற்கு ரயில்வே மெத்தனம் காட்டுவதாக பயணியர் குற்றச்சாட்டு

சிக்னல் கோளாறு, மின்வடம் துண்டிப்பால் மின்சார ரயில் சேவையில் தொடரும் பாதிப்பு தெற்கு ரயில்வே மெத்தனம் காட்டுவதாக பயணியர் குற்றச்சாட்டு

சிக்னல் கோளாறு, மின்வடம் துண்டிப்பால் மின்சார ரயில் சேவையில் தொடரும் பாதிப்பு தெற்கு ரயில்வே மெத்தனம் காட்டுவதாக பயணியர் குற்றச்சாட்டு

1


UPDATED : ஜூலை 21, 2025 03:02 AM

ADDED : ஜூலை 21, 2025 01:42 AM

Google News

UPDATED : ஜூலை 21, 2025 03:02 AM ADDED : ஜூலை 21, 2025 01:42 AM

1


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை, ஜூலை 21-

சென்னை, புறநகர் மின்சார ரயில் சேவையில் சிக்னல் கோளாறு, மின்வடம் துண்டிப்பது உள்ளிட்ட காரணங்களால் அடிக்கடி பாதிப்பு ஏற்பட்டு, லட்சக்கணக்கான பயணியர் தினமும் அவதிப்படுகின்றனர்.

ரயில்களை சீராக இயக்காமல் தெற்கு ரயில்வே மெத்தனம் காட்டுவதாக, பயணியர் குற்றம் சாட்டுகின்றனர்.சென்னையில் இருந்து தாம்பரம், செங்கல்பட்டு, ஆவடி, திருவள்ளூர், அரக்கோணம், கும்மிடிப்பூண்டி, வேளச்சேரி தடத்தில் 450க்கும் மேற்பட்ட மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன.

இவற்றில், தினமும் ஒன்பது லட்சத்திற்கும் மேற்பட்டோர் பயணம் செய்து வருகின்றனர்.

இத்தடங்களில் ரயில் பாதைகள் மற்றும் பணிமனைகளில் பராமரிப்பு பணி நடப்பதாகக்கூறி, வாரந்தோறும் 50க்கும் மேற்பட்ட மின்சார ரயில்களின் சேவை ரத்து செய்யப்படுகிறது.

இது மட்டுமல்லாமல், சிக்னல் கோளாறு, மின்வடம் அறுந்து விழுவது, சில நேரங்களில் தடம்புரளுவது போன்ற விபத்துகளும் நடக்கின்றன. இதனால், பணிக்கு வந்து செல்லும் லட்சக்கணக்கானோர், தினமும் அவதியடையும் நிலை ஏற்படுகிறது.

பயணியர் கூறியதாவது:

சென்னை, புறநகரில் வசிப்போரில் பெரும்பாலானோர் மின்சார ரயில்களை நம்பியே இருக்கின்றனர். ஆனால், சீரான ரயில் சேவை இல்லாததால், பயணியர் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.

குறிப்பாக, சென்ட்ரல் - ஆவடி, அரக்கோணம் மற்றும் கும்மிடிப்பூண்டி, சூலுார்பேட்டை தடத்தில் தினமும் 15 முதல் 30 நிமிடங்கள் வரை மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன.

இதுவே, தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுவிட்டால், மணிக்கணக்கில் மின்சார ரயில்களின் சேவையில் பாதிப்பு ஏற்படுகிறது. ரயில்களை சீராக இயக்காமல் தெற்கு ரயில்வே மெத்தனம் காட்டுகிறது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

மின்சார ரயில்களுக்கு கால அட்டவணை தயாரித்து, அதன்படி இயக்க வேண்டும். ரயில் நிலையங்கள் மேம்பாடு, ரயில்களின் வேகம் அதிகரிப்பு, 'ஏசி' ரயில் சேவை துவக்கம் போன்ற திட்டங்கள் மேற்கொள்ளப்படுகிறது.ஆனால், சீரான ரயில்களின் இயக்கத்தில் தினமும் குளறுபடி நடந்து கொண்டிருக்கிறது. பராமரிப்பு பணி காரணமாக, மறு அறிவிப்பு வெளியிடாமல் 55க்கும் மேற்பட்ட மின்சார ரயில்கள், கடந்த ஆண்டில் ரத்து செய்யப்பட்டன. இந்த ரயில்களின் சேவை மீண்டும் துவங்கவில்லை. எந்த பாதிப்பும் இல்லாத நேரத்திலும், 30 நிமிடங்கள் வரை மின்சார ரயில்களுக்காக காத்திருக்க வேண்டியுள்ளது.தெற்கு ரயில்வேயின் சென்னை ரயில் கோட்டம், மெத்தனமாக இல்லாமல், ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எடுத்து, சீரான மின்சார ரயில் சேவையை வழங்க வேண்டும்.

- முருகையன்

திருநின்றவூர் ரயில் பயணியர் பொதுநலச் சங்கச் செயலர்

ரயில்கள் பாதுகாப்பாக இயக்க, பராமரிப்பு பணி முக்கியம். சிறப்பு ரயில்கள் இயக்கம் போன்ற, மாற்று ஏற்பாடுகளை முடிந்த வரை செய்து வருகிறோம். கூடுதல் ரயில்கள் பாதை அமைக்கும்போது தான், மின்சார ரயில்களின் சேவை பாதிப்பு இல்லாமல் இயக்க முடியும். இதற்கான, பணிகள் தற்போது ஆரம்ப நிலையில் இருக்கிறது.

- சென்னை ரயில் கோட்ட அதிகாரிகள்






      Dinamalar
      Follow us