/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
சித்தாமூரில் பேருந்து நிழற்குடை அமைக்க பயணியர் கோரிக்கை
/
சித்தாமூரில் பேருந்து நிழற்குடை அமைக்க பயணியர் கோரிக்கை
சித்தாமூரில் பேருந்து நிழற்குடை அமைக்க பயணியர் கோரிக்கை
சித்தாமூரில் பேருந்து நிழற்குடை அமைக்க பயணியர் கோரிக்கை
ADDED : ஏப் 17, 2025 01:13 AM

சித்தாமூர்:சித்தாமூர் பகுதியில் வட்டார வளர்ச்சி அலுவலகம், வேளாண் அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலகங்கள் செயல்படுகின்றன. மேலும் பஜார் பகுதியில் நுாற்றுக்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன.
சித்தாமூர் பேருந்து நிறுத்தத்தை தினசரி நுாற்றுக்கணக்கான பொதுமக்கள் பயன்படுத்துகின்றனர்.
பயணியர் பயன்பாட்டிற்காக 10 ஆண்டுகளுக்கு முன் சூணாம்பேடு சாலை மார்கத்தில் பேருந்து நிறுத்த நிழற்குடை அமைக்கப்பட்டு, பயணியர் பயன்படுத்தி வந்தனர்.
செய்யூர்- போளூர் சாலை விரிவாக்கத்திற்கு இடையூறாக இருந்ததால், பேருந்து நிறுத்த நிழற்குடை இடித்து அகற்றப்பட்டது.
தற்போது சூணாம்பேடு சாலை மார்கத்தில் நிழற்குடை வசதி இல்லாததால், பேருந்திற்காக காத்திருக்கும் பயணியர் வெயில் மற்றும் மழையில் நணைந்து காத்திருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியவர்கள் கடும் அவதிப்படுகின்றனர்.
ஆகையால் ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, சித்தாமூர் பேருந்து நிறுத்தத்தில் நிழற்குடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்கின்றனர்.