/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கிளாம்பாக்கம் முனையத்தில் 'பார்க்கிங்' முன்பதிவு பயணியர் சலுகை எதிர்பார்ப்பு
/
கிளாம்பாக்கம் முனையத்தில் 'பார்க்கிங்' முன்பதிவு பயணியர் சலுகை எதிர்பார்ப்பு
கிளாம்பாக்கம் முனையத்தில் 'பார்க்கிங்' முன்பதிவு பயணியர் சலுகை எதிர்பார்ப்பு
கிளாம்பாக்கம் முனையத்தில் 'பார்க்கிங்' முன்பதிவு பயணியர் சலுகை எதிர்பார்ப்பு
ADDED : பிப் 12, 2025 12:29 AM

கிளாம்பாக்கம்,கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து அரசு பேருந்து வாயிலாக வெளியூர் செல்லும் பயணியரில், 'டிக்கெட்' முன்பதிவு செய்து பயணிப்போருக்கு, வாகன 'பார்க்கிங்' கட்டணத்தில் சலுகை வழங்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
சென்னை, கோயம்பேடில் இயங்கிய வந்த புறநகர் பேருந்து நிலையம், இடப்பற்றாக்குறை மற்றும் போக்குவரத்து நெரிசலால் திணறியது.
3,146 'பைக்'
இதற்கு தீர்வாக, வண்டலுார் அடுத்த கிளாம்பாக்கத்தில், 88.52 ஏக்கர் பரப்பில், புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட்டு, கடந்த 2023, டிசம்பரில் திறக்கப்பட்டது.
இந்த பேருந்து நிலையத்தின் முதல் அடித்தளத்தில், 682 கார்கள் நிறுத்தவும், இரண்டாவது அடித்தளத்தில், 3,146 'பைக்'குகள் நிறுத்தவும் 'பார்க்கிங்' பகுதி உள்ளது.
இந்நிலையில், இங்கு வாகனத்தை நிறுத்தி, வெளியூர் செல்லும் பயணியர், 'பார்க்கிங்' கட்டணம் அதிகம் உள்ளதாக புகார் எழுப்பி வருகின்றனர்.
இது குறித்து பயணியர் கூறியதாவது:
இந்த பேருந்து நிலையத்தில், 'பார்க்கிங்' கட்டணம் வசூலித்தல், செந்துார் என்ற தனியார் நிறுவனம் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
தற்போது, இரு சக்கர வாகனத்திற்கு நாள் ஒன்றிற்கு 40 ரூபாய், நான்கு சக்கர வாகனங்களுக்கு 200 ரூபாய் என, கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதில், முதல் மூன்று மணி நேரத்திற்கு இருசக்கர வாகனத்திற்கு 10 ரூபாய், நான்கு சக்கர வாகனத்திற்கு 50 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
தவிர மூன்று முதல் ஆறு மணி நேரத்திற்கு, இருசக்கர வாகனத்திற்கு 15 ரூபாய், கார்களுக்கு 50 ரூபாயாகவும், 6 முதல் 12 மணி நேரத்திற்கு கார்களுக்கு 80 ரூபாய், பைக்குகளுக்கு 25 ரூபாய் எனவும் வசூலிக்கப்படுகிறது. 12 மணி நேரம் கடந்துவிட்டால், ஒரு நாள் கட்டணம் கணக்கிடப்படுகிறது.
திருவிழா காலங்களில், தென் மாவட்டங்களுக்கு செல்லும் பயணியர் மூன்று அல்லது நான்கு நாட்கள் கழித்தே சென்னை திரும்புவர்.
ஒருவர், தன் காரை நிறுத்திவிட்டு நான்கு நாட்கள் கழித்து திரும்பி வந்தால், அவர் 'பார்க்கிங்' கட்டணமாக 800 முதல் 1,000 ரூபாய் வரை செலுத்தும் நிலை உள்ளது. இரு சக்கர வாகனம் என்றால், 200 ரூபாய் வரை செலுத்த வேண்டும்.
கோரிக்கை
இந்த கட்டண தொகை அதிகம். எனவே, இதை பாதியாக குறைக்க வேண்டுமென, கோரிக்கை வலுத்துள்ளது.
இதனால், ஏராளமானோர் அரசு பேருந்துகளில் முன்பதிவு செய்து பயணிப்பர். அரசுக்கும் வருவாய் அதிகரிக்கும். முன்பதிவு செய்யும் போதே, வாகனத்தின் பதிவு எண் உள்ளிட்ட விபரங்களை முன்பதிவு பயணச் சீட்டில் பதிவு செய்யும்படி, நடைமுறைகளை மாற்ற வேண்டும்.
மேலும், வெளியூர் சென்று திரும்பும்போது, வாகனங்கள் 'பஞ்சர்' ஆகியிருந்தாலோ, 'டயர்'களில் காற்று குறைவாகி இருந்தாலோ, அதை நிவர்த்தி செய்ய, 'பார்க்கிங்' பகுதி உள்ளேயே உரிய ஏற்பாடு செய்து தரவேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.