/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
நிழற்குடை அருகே நிற்காத பஸ்கள் சித்தாமூரில் பயணியர் அதிருப்தி
/
நிழற்குடை அருகே நிற்காத பஸ்கள் சித்தாமூரில் பயணியர் அதிருப்தி
நிழற்குடை அருகே நிற்காத பஸ்கள் சித்தாமூரில் பயணியர் அதிருப்தி
நிழற்குடை அருகே நிற்காத பஸ்கள் சித்தாமூரில் பயணியர் அதிருப்தி
ADDED : ஜன 22, 2025 12:13 AM

சித்தாமூர், சித்தாமூர் பகுதியில் வட்டார வளர்ச்சி அலுவலகம், அரசு பள்ளிகள், வேளாண் அலுவலகம், மருத்துவமனை உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலகங்கள் செயல்படுகின்றன.
மேலும் பஜார் பகுதியில், 100க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன.
சித்தாமூர் சுற்று வட்டார பகுதி மக்கள் செங்கல்பட்டு, தாம்பரம், சென்னை, புதுச்சேரி போன்ற வெளியூர்களுக்குச் செல்ல சித்தாமூர் பஜார் பகுதியில் உள்ள பேருந்து நிறுத்தத்தைப் பயன்படுத்துகின்றனர்.
இதன் காரணமாக, தினமும் நுாற்றுக்கணக்கான பொதுமக்கள் சித்தாமூர் பஜார் பகுதிக்கு வந்து செல்கின்றனர்.
பயணியர் பயன்பாட்டிற்காக, பல ஆண்டுகளுக்கு முன் சித்தாமூர் பஜார் பகுதியில், பேருந்து நிறுத்த நிழற்குடை அமைக்கப்பட்டது.
ஆனால், பேருந்துகள் நிழற்குடையில் நிற்காமல், சாலை சந்திப்பில் நின்று செல்வதால், நிழற்குடை பயன்பாடு இல்லாமல் பழுதடைந்து உள்ளது. தற்போது, நிழற்குடை முன் கடைகள் அமைத்து ஆக்கிரமிக்கப்பட்டு வருகிறது.
எனவே, துறை சார்ந்த அதிகாரிகள் நிழற்குடையை சீரமைத்து, அனைத்து பேருந்துகளும் நிழற்குடை எதிரே நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.