/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கேளம்பாக்கத்தில் நிழற்குடை அமைக்க பயணியர் கோரிக்கை
/
கேளம்பாக்கத்தில் நிழற்குடை அமைக்க பயணியர் கோரிக்கை
கேளம்பாக்கத்தில் நிழற்குடை அமைக்க பயணியர் கோரிக்கை
கேளம்பாக்கத்தில் நிழற்குடை அமைக்க பயணியர் கோரிக்கை
ADDED : டிச 22, 2025 05:09 AM

திருப்போரூர்: கேளம்பாக்கம் காவல் நிலைய பேருந்து நிறுத்தத்தில், நிழற்குடை அமைக்க வேண்டும் என, பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருப்போரூர் ஒன்றியம், தையூர் ஊராட்சி எல்லையில், கேளம்பாக்கம் காவல் நிலைய பேருந்து நிறுத்தம் உள்ளது.
இந்த பேருந்து நிறுத்தம் வழியாக தாம்பரம், குன்றத்துார், பிராட்வே, தி.நகர், கோயம்பேடு, கிளாம்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு தடம் சார்ந்த, 100க்கும் மேற்பட்ட பேருந்துகள் செல்கின்றன.
கேளம்பாக்கம், தையூர் உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஏராளமானோர், மேற்கண்ட பேருந்து நிறுத்தத்தில் இருந்து சென்று வருகின்றனர்.
இங்கு நிழற்குடை இல்லாததால் வெயிலிலும் மழையிலும் பயணியர் அவதிப்பட்டு வருகின்றனர்.
இதனால் பெண்கள், குழந்தைகள், பள்ளி, கல்லுாரி மாணவர்கள், முதியோர் மிகவும் சிரமப்படுகின்றனர்.
எனவே, இங்கு நிழற்குடை அமைக்க வேண்டும் என, பயணியர் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

