/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பஸ் ஓட்டுநர் சாமர்த்தியத்தால் தப்பிய பயணியர்
/
பஸ் ஓட்டுநர் சாமர்த்தியத்தால் தப்பிய பயணியர்
ADDED : ஜன 28, 2026 06:44 AM

செங்கல்பட்டு:செங்கல்பட்டு அருகே, அரசு பேருந்து 'பிரேக்' பழுதடைந்து சாலையோர தடுப்பில் மோதி விபத்து ஏற்பட்டது.
சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து விழுப்புரம் நோக்கி, விழுப்புரம் கோட்ட அரசு பேருந்து நேற்று மதியம் 30 பயணியருடன் சென்றது.
செங்கல்பட்டு அடுத்த இருங்குன்றம்பள்ளி ஜி.எஸ்.டி., சாலை மேம்பாலத்தின் மீது சென்ற போது, 'பிரேக்' பழுதடைந்து உள்ளது.துரிதமாக செயல்பட்ட ஓட்டுநர், சாலையோர தடுப்பில் மோதி பேருந்தை நிறுத்தினார்.
ஓட்டுநர் சமயோஜிதமாக செயல்பட்டதால், பெரும் விபத்து தடுக்கப்பட்டு, பயணியர் காயமின்றி தப்பினர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த செங்கல்பட்டு தாலுகா போலீசார், 'கிரேன்' உதவியுடன் பேருந்தை மீட்டு, போக்குவரத்து நெரிசலை சரி செய்தனர்.

