/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
தொழுப்பேடு நிறுத்தத்தை தவிர்க்கும் பேருந்துகளால் பயணியர் தவிப்பு
/
தொழுப்பேடு நிறுத்தத்தை தவிர்க்கும் பேருந்துகளால் பயணியர் தவிப்பு
தொழுப்பேடு நிறுத்தத்தை தவிர்க்கும் பேருந்துகளால் பயணியர் தவிப்பு
தொழுப்பேடு நிறுத்தத்தை தவிர்க்கும் பேருந்துகளால் பயணியர் தவிப்பு
ADDED : ஜன 24, 2025 12:42 AM

அச்சிறுபாக்கம்,அச்சிறுபாக்கம் அருகே சென்னை -- திருச்சி தேசிய நெடுஞ்சாலை ஓரம் கடமலைப்புத்துார், தொழுப்பேடு ஊராட்சிகள் உள்ளன.
முருங்கை, வெளியம்பாக்கம், கரசங்கால், ஆத்துார், தொழுப்பேடு, நெற்குணம், பெரும்பேர் கண்டிகை உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன் பெரும் வகையில், தொழுப்பேடு பகுதி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள இப்பேருந்து நிறுத்தத்தை பயன்படுத்தி வருகின்றனர்.
மேல்மருவத்துார், செங்கல்பட்டு, தாம்பரம், சென்னை போன்ற பெரு நகரங்களுக்கு கல்வி பயில செல்லும் மாணவ, மாணவியர் மற்றும் வெளியூர் பகுதிக்கு வேலைக்கு செல்லும் மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
மதுராந்தகம் பணிமனையில் இருந்து முருங்கை, ஒரத்தி, சிறுதாமூர் பகுதிகளுக்கு குறிப்பிட்ட நேரங்களில் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
போதிய அளவு பேருந்து வசதி இல்லாததால், தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் காத்திருக்கின்றனர்.
தொழுப்பேடு பேருந்து நிறுத்தத்தில், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருச்சி, சேலம் போன்ற பகுதிகளில் இருந்து சென்னைக்கு இயக்கப்படும் அரசு பேருந்துகள், தொழுப்பேடு பேருந்து நிறுத்தத்தில் நிறுத்தி செல்ல வேண்டும் என அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது.
ஆனால், பேருந்தை நிறுத்தாமல் செல்கின்றனர். இதனால், நீண்ட நேரம் பேருந்துகளுக்காக காத்திருக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது.
மேலும், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களில் கூடுதல் கட்டணம் செலுத்தி மேல்மருவத்துார் சென்று, அங்கிருந்து பேருந்துகளில் நகர பகுதிகளுக்கு செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது.
இதனால், பொருளாதார இழப்பு ஏற்படுகிறது.
எனவே, துறை சார்ந்த அதிகாரிகள், தொழுப்பேடு பேருந்து நிறுத்தத்தில், பேருந்துகளை நிறுத்திச் செல்ல உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென, பேருந்து பயணியர் கோரிக்கை விடுக்கின்றனர்.

