/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
நிழற்குடை இல்லாத நிறுத்தம் பவுஞ்சூர் பயணியர் திண்டாட்டம்
/
நிழற்குடை இல்லாத நிறுத்தம் பவுஞ்சூர் பயணியர் திண்டாட்டம்
நிழற்குடை இல்லாத நிறுத்தம் பவுஞ்சூர் பயணியர் திண்டாட்டம்
நிழற்குடை இல்லாத நிறுத்தம் பவுஞ்சூர் பயணியர் திண்டாட்டம்
ADDED : டிச 26, 2024 12:46 AM

பவுஞ்சூர் பவுஞ்சூர் பஜார் பகுதியில் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் செயல்படுகின்றன. இப்பகுதியில் வட்டார வளர்ச்சி அலுவலகம்,வேளாண் விரிவாக்க மையம், வங்கி உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலகங்கள் செயல்படுகின்றன.
மேலும் பஜார் பகுதியில் 100க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. பச்சம்பாக்கம், திருவாதுார், பவுஞ்சூர் உள்ளிட்ட ஐந்துக்கும் மேற்பட்ட கிராம மக்கள், வெளியூர்களுக்கு செல்ல பவுஞ்சூர் பஜார் பகுதியில் உள்ள பேருந்து நிறுத்தத்தைப் பயன்படுத்துகின்றனர்.
பவுஞ்சூர் வழியாக மதுராந்தகம், செங்கல்பட்டு, சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு 15 க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பேருந்துகள் தினசரி இயக்கப்படுகின்றன.
தினமும் ஏராளமான பள்ளி மாணவ-மாணவியர், அரசு ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் பயன்படுத்தும், பவுஞ்சூர் பேருந்து நிறுத்தத்தில் நிழற்குடை வசதி இல்லாமல் பயணியர் சிரமப்படுகின்றனர்.
ஆகையால் துறை சார்ந்த அதிகாரிகள் பவுஞ்சூர் பஜார் பகுதியில், வட்டார வளர்ச்சி அலுவலகம் எதிரே உள்ள இடத்தில் பேருந்து நிறுத்த நிழற்குடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.