/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
நீதிமன்ற நிலுவை வழக்குகள் சமரச மையத்தில் தீர்வுகாணலாம்
/
நீதிமன்ற நிலுவை வழக்குகள் சமரச மையத்தில் தீர்வுகாணலாம்
நீதிமன்ற நிலுவை வழக்குகள் சமரச மையத்தில் தீர்வுகாணலாம்
நீதிமன்ற நிலுவை வழக்குகள் சமரச மையத்தில் தீர்வுகாணலாம்
ADDED : ஆக 03, 2025 10:51 PM
செங்கல்பட்டு:செங்கல்பட்டு மாவட்டத்தில், நிலுவையில் உள்ள வழக்குகளை சமரச மையம் மூலம் தீர்வுகாணலாம்.
இதுகுறித்து மாவட்ட நீதிமன்ற நிர்வாகம் விடுத்துள்ள செய்திக் குறிப்பு:
உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின்படி, உயர் நீதிமன்றங்கள், மாவட்ட நீதிமன்றங்கள் மற்றும் தாலுகாவில் அமைந்துள்ள நீதிமன்றங்களில், நிலுவையில் உள்ள வழக்குகள், 90 நாட்களுக்குள், சமரச தீர்வு மையங்களில், தீர்வுகாணலாம்.
அந்த வகையில் செங்கல்பட்டு மாவட்ட நீதிமன்ற கட்டுப்பாட்டில் உள்ள, செங்கல்பட்டு, மதுராந்தகம், செய்யூர், திருக்கழுக்குன்றம், திருப்போரூர், சோழிங்கநல்லுார், தாம்பரம், பல்லாவரம், ஆலந்துார் ஆகிய நீதிமன்றங்களில் உள்ள சமரச மையங்களில் செப்., 30ம் தேதி வரை தீர்வு காணும் முகாம் நடக்கிறது. இம்மையம், சனி, ஞாயிறு விடுமுறை நாட்களிலும் இயங்கும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.