/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கொசுக்கடியால் துாக்கம் போச்சு வண்டலுாரில் மக்கள் அவதி
/
கொசுக்கடியால் துாக்கம் போச்சு வண்டலுாரில் மக்கள் அவதி
கொசுக்கடியால் துாக்கம் போச்சு வண்டலுாரில் மக்கள் அவதி
கொசுக்கடியால் துாக்கம் போச்சு வண்டலுாரில் மக்கள் அவதி
ADDED : செப் 03, 2025 10:05 PM
வண்டலுார்:வண்டலுார் ஊராட்சியில், கொசுக்கடியால் இரவில் துாங்க முடியாமல், அப்பகுதி மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். ஊராட்சி நிர்வாகம், தெருக்கள்தோறும் கொசு மருந்து அடிக்க வேண்டுமென, வண்டலுார் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
காட்டாங்குளத்துார் ஒன்றியம், வண்டலுார் ஊராட்சியில் உள்ள 15 வார்டுகளில், 40,000க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.
இங்கு, கடந்த ஒரு மாதமாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இதனால், கழிவுநீர் கால்வாய்களில் மழைநீர் தேங்கி, கொசு உற்பத்தி அதிகரித்துள்ளது.
இதுமட்டுமின்றி, தெருக்களில் தேங்கும் குப்பையும் மழை நீரில் நனைந்து, கொசு உற்பத்தி மேலும் அதிகரித்து வருகிறது.
இதனால், இப்பகுதியில் இரவு நேரங்களில், கொசுக் கடியால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
குறிப்பாக குழந்தைகள், முதியோர், நோயாளிகள் துாக்கமின்றி தவிக்கின்றனர்.
எனவே, தெருக்கள் தோறும் கொசு மருந்து அடிக்க, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வண்டலுார் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.