/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
புதிய அடுக்குமாடி குடியிருப்பு கட்ட மேலக்கோட்டையூர் மக்கள் எதிர்ப்பு
/
புதிய அடுக்குமாடி குடியிருப்பு கட்ட மேலக்கோட்டையூர் மக்கள் எதிர்ப்பு
புதிய அடுக்குமாடி குடியிருப்பு கட்ட மேலக்கோட்டையூர் மக்கள் எதிர்ப்பு
புதிய அடுக்குமாடி குடியிருப்பு கட்ட மேலக்கோட்டையூர் மக்கள் எதிர்ப்பு
ADDED : செப் 28, 2024 11:46 PM

திருப்போரூர்,:கேளம்பாக்கம் - -வண்டலுார் சாலை, மேலக்கோட்டையூர் பகுதியில், அரசுக்கு சொந்தமான தரிசு நிலம் சர்வே எண் 171ல், 15 ஏக்கர் உள்ளது. இந்த நிலத்தை, கடந்த 2021ம் ஆண்டு, குடிசை மாற்று வாரியத்துக்கு அரசால் ஒப்படைக்கப்பட்டது.
இதில், 6 ஏக்கர் இடத்தில், 500 வீடுகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடம் கட்டுவதற்காக, நேற்று முன்தினம் குடிசை மாற்று வாரிய அதிகாரிகள் அளவீடு செய்யும் பணி மேற்கொண்டனர்.
அப்போது, அப்பகுதிவாசிகள் எதிர்ப்பு தெரிவித்து, அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்தனர். தகவல் அறிந்த தாழம்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, மக்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில், நேற்று காலை 8:00 மணிக்கு, மேலக்கோட்டையூர் குடியிருப்பு கட்ட அளவீடு செய்த அதே பகுதியில், ராஜிவ்காந்தி நகர், போலீஸ் குடியிருப்பு பகுதிகளைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர், இத்திட்டத்தை கைவிடக்கோரி போராட்டம் செய்தனர்.
போராட்டத்தில் ஈடுபட்டோர் கூறியதாவது:
ஏற்கனவே காவலர் குடியிருப்பு உள்ள இப்பகுதியில், குடிநீர் வசதி, முறையான கழிவுநீர் பாதை என, போதிய அடிப்படை வசதிகள் இல்லாமல், மக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர்.
மேலும், இந்த பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு வீடுகள் அமைந்தால், மேலும் சுகாதார சீர்கேடுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. இப்பகுதிக்கு தேவையான அடிப்படை வசதி செய்து கொடுத்துவிட்டு, பின் இந்த திட்டத்தை துவங்கட்டும்.
இதுகுறித்து அதிகாரிகளிடம் புகார் அளித்தும், இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. கலெக்டர் நேரில் வந்து ஆய்வு செய்து, தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதையடுத்து, தாழம்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சார்லஸ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, “சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகளிடம் உங்கள் கோரிக்கையினை தெரிவித்தால், தீர்வு ஏற்படும். தற்போது உங்கள் போராட்டத்தை கைவிடுங்கள்,” என கூறினார்.
இதையடுத்து, மக்கள் அனைவரும் கலைந்து சென்றனர்.