/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
வாகனங்களில் வந்து அமரும் விஷப்பூச்சிகளால் மக்கள் அவதி
/
வாகனங்களில் வந்து அமரும் விஷப்பூச்சிகளால் மக்கள் அவதி
வாகனங்களில் வந்து அமரும் விஷப்பூச்சிகளால் மக்கள் அவதி
வாகனங்களில் வந்து அமரும் விஷப்பூச்சிகளால் மக்கள் அவதி
ADDED : அக் 14, 2024 06:30 AM

கூடுவாஞ்சேரி : கூடுவாஞ்சேரி காவல் நிலைய வளாகத்தில், போக்குவரத்து காவல் நிலையம், மதுவிலக்கு அமலாக்க பிரிவு, உதவி கமிஷனர் அலுவலகம் மற்றும் அனைத்து மகளிர் காவல் நிலையம் ஆகியவை செயல்பட்டு வருகின்றன.
கூடுவாஞ்சேரி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில், விபத்தில் சிக்கும் வாகனங்கள் மற்றும் வழக்கில் தொடர்புடைய வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, காவல் நிலைய வளாகத்திற்குள், மகளிர் காவல் நிலையம் அருகில் வரிசையாக நிறுத்தப்பட்டுள்ளன.
இது, காவல் நிலையங்களுக்கு வரும் பொதுமக்களுக்கு இடையூறாக இருப்பதோடு, தற்போது பெய்த மழையில், அந்த இடம் முழுதும் செடி, கொடிகள் வளர்ந்து, விஷ பூச்சிகள் அதிகமாக நடமாடுகின்றன.
மகளிர் காவல் நிலையத்திற்கு, குடும்ப பிரச்னை காரணமாக, குழந்தைகளுடன் வரும் பெண்கள், இந்த இடத்தில் தான் காத்திருக்க வேண்டிய சூழல் உள்ளது.
அவர்களுக்கு, அங்கு உலவும் விஷ பூச்சிகளால் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது.
எனவே, தேங்கிய வாகனங்களை அப்புறப்படுத்த, ஏலம் விட்டு அப்புறப்படுத்த, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.