/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
ஏரியில் கிராவல் மண் கொள்ளை பேரம்பாக்கம் கிராமத்தினர் குற்றச்சாட்டு
/
ஏரியில் கிராவல் மண் கொள்ளை பேரம்பாக்கம் கிராமத்தினர் குற்றச்சாட்டு
ஏரியில் கிராவல் மண் கொள்ளை பேரம்பாக்கம் கிராமத்தினர் குற்றச்சாட்டு
ஏரியில் கிராவல் மண் கொள்ளை பேரம்பாக்கம் கிராமத்தினர் குற்றச்சாட்டு
ADDED : அக் 14, 2025 12:31 AM

சித்தாமூர்,
பேரம்பாக்கம் ஏரியில் இருந்து கிராவல் மண் கொள்ளையடிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக, கிராம மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
சித்தாமூர் அடுத்த பேரம்பாக்கம் கிராமத்தில், 60 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஏரி உள்ளது.
ஊரக வளர்ச்சித்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த ஏரி தண்ணீர் மூலமாக, 200க்கும் மேற்பட்ட ஏக்கரில் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இந்த ஏரியை சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதைப் பயன்படுத்தி, கிராமத்தைச் சேர்ந்த தனிநபர்கள் சிலர், ஏரியில் இருந்து லாரிகள் வாயிலாக கிராவல் மண்ணை எடுத்து, வெளியிடங்களில் 1,000 முதல், 2,000 ரூபாய் வரை விற்பனை செய்து வருவதாக, கிராம மக்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர். இதனால், ஏரியில் பெரிய அளவிலான பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன.
ஏரியில் இருந்து மண் திருடுவது குறித்து ஏற்கனவே புகார்கள் சென்ற நிலையில், கடந்த 10 நாட்களுக்கு முன் வருவாய்த் துறை சார்பாக எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
ஆனாலும், ஆயுதபூஜை தொடர் விடுமுறையிலும் கிராவல் மண் கொள்ளை நடந்துள்ளது.
இந்நிலையில், நேற்று காலை 10:30 மணியளவில், சம்பவ இடத்திற்குச் சென்ற பேரம்பாக்கம் கிராம நிர்வாக அலுவலர், சித்தாமூர் வருவாய் ஆய்வாளர் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள், கிராவல் மண் கொள்ளையடிக்கப்பட்ட இடங்களை ஆய்வு செய்தனர். கிராவல் மண் கொள்ளை குறித்து விசாரித்து வருகின்றனர்.