/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
அங்கன்வாடி மீது படர்ந்துள்ள கொடிகள் அப்புறப்படுத்தப்படுமா?
/
அங்கன்வாடி மீது படர்ந்துள்ள கொடிகள் அப்புறப்படுத்தப்படுமா?
அங்கன்வாடி மீது படர்ந்துள்ள கொடிகள் அப்புறப்படுத்தப்படுமா?
அங்கன்வாடி மீது படர்ந்துள்ள கொடிகள் அப்புறப்படுத்தப்படுமா?
ADDED : அக் 14, 2025 12:30 AM

கருங்குழி பேரூராட்சியில், 15 வார்டுகள் உள்ளன. இங்குள்ள பேரூராட்சி அலுவலக கட்டடம் பின்புறம், அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு, 15-க்கும் மேற்பட்ட குழந்தைகள் ஆரம்ப கல்வி பயின்று வருகின்றனர்.
கட்டடத்தின் மேல் பகுதியில் கொடிகள் வளர்ந்து, கட்டடம் உறுதித் தன்மையை இழந்து வருகிறது. மேலும், அங்கன்வாடி வளாகத்தில் செடிகள் வளர்ந்துள்ளதால் பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் நடமாட்டம் உள்ளது.
எனவே, அங்கன்வாடி குழந்தைகளின் பாதுகாப்பு கருதி, இங்குள்ள செடி, கொடிகளை வெட்டி அப்புறப்படுத்த, பேரூராட்சி நிர்வாகத்தினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- ---ஆர்.தீபக், கருங்குழி