/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
ஊராட்சி அலுவலகத்திற்கு புது கட்டடம் கட்டப்படுமா?
/
ஊராட்சி அலுவலகத்திற்கு புது கட்டடம் கட்டப்படுமா?
ADDED : அக் 14, 2025 12:29 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்போரூர் ஒன்றியம், பெரியவிப்பேடு ஊராட்சியில், ஊராட்சி அலுவலக கட்டடம் உள்ளது. 20 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட இக்கட்டடத்தில், தற்போது விரிசல் விழுந்துள்ளது.
மேலும், தளம் சேதமடைந்து உள்ளதால், மழையின் போது தண்ணீர் கசிந்து பாதிப்பு ஏற்படுகிறது. இதுதவிர கதவுகள், ஜன்னல்கள் சேதமடைந்துள்ளன.
இந்த ஊராட்சி அலுவலக கட்டடத்தின் பின்புற சுவரில் மரம் வளர்ந்து, இடிந்து விழும் நிலையில் உள்ளதால், தற்போது ஊராட்சி அலுவலக கட்டடம் பூட்டப்பட்டுள்ளது. பழுதடைந்த கட்டடத்தை இடித்து அகற்றி, புதிதாக ஊராட்சி அலுவலக கட்டடம் கட்ட வேண்டும்.
- செல்வம், திருப்போரூர்.