/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பெரியபாளையத்தம்மன் கோவில் ஆடி திருவிழா தேரோட்டம்
/
பெரியபாளையத்தம்மன் கோவில் ஆடி திருவிழா தேரோட்டம்
ADDED : ஆக 04, 2025 11:28 PM
திருப்போரூர்,
தண்டலம் பெரியபாளையத்தம்மன் கோவில் ஆடித்திருவிழா தேரோட்டம் நேற்று நடந்தது.
திருப்போரூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட தண்டலம் கிராமம் பெரியபாளையத்தம்மன் கோவில் ஆடித்திருவிழா ஜூலை 31ல் துவங்கியது. திருவிழாவை முன்னிட்டு தினமும், பால்குடம் எடுத்தல், அம்மன் சக்திகரக வீதியுலா வருதல், கூழ்வார்த்தல் விழா நடந்தது.
விழாவின், ஐந்தாம் நாளான நேற்று காலை 8:00 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. அதை தொடர்ந்து செல்லியம்மன் கோவிலிருந்து தாய்வீட்டு சீர்வரிசை எடுத்து வந்து அம்மனுக்கு திருக்கல்யாண வைபவம் நடந்நது.
அதை தொடர்ந்து, மாலை 5:00 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட தேரில், சிறப்பு அலங்காரத்தில் பெரியபாளையத்தம்மன் எழுந்தருளினார். தேரில் எழுந்தருளிய அம்மனுக்கு சிறப்பு ஆராதனை, பூஜை நடந்தது.
பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுக்க, தேரோட்டம் முக்கிய வீதிகளை சுற்றி வந்து, நிலையை அடைந்தது. இன்று மாலை 3:00 மணிக்கு மஞ்சள் நீராட்டு விழா நடக்கிறது. இரவு 9:00 மணிக்கு தெருகூத்து நடைபெறும்.