/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
தாம்பரம் மண்டல குழு தலைவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கோரி மனு
/
தாம்பரம் மண்டல குழு தலைவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கோரி மனு
தாம்பரம் மண்டல குழு தலைவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கோரி மனு
தாம்பரம் மண்டல குழு தலைவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கோரி மனு
ADDED : பிப் 04, 2024 05:45 AM
தாம்பரம்: தாம்பரம் மாநகராட்சி, மூன்றாவது மண்டலத்தில் 14 கவுன்சிலர்கள். இதன் மண்டல குழு தலைவர் ஜெயபிரதீப் சந்திரன்.
இவர் மீது, நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர வேண்டும் என, தி.மு.க., மற்றும் சுயேட்சை கவுன்சிலர்கள் ஒன்பது பேர் கையெழுத்திட்ட மனு, மேயர் வசந்தகுமாரி, துணை மேயர் காமராஜ் ஆகியோர் தலைமையில், மாநகராட்சி கமிஷனர் அழகுமீனாவிடம், நேற்று முன்தினம் வழங்கப்பட்டது.
தி.மு.க., கவுன்சிலர்கள் கூறியதாவது:
மண்டல குழு தலைவராக உள்ள ஜெயபிரதீப், தன்னிச்சையாக செயல்படுகிறார். முறையான 'டெண்டர்' விடாமலும், மண்டல குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றாமலும் பல வேலைகள் செய்து உள்ளனர்.
அதனால், மண்டல குழு தலைவர் மீது அதிருப்தி ஏற்பட்டுள்ளது. அவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரக் கோரி கடிதம் கொடுத்துள்ளோம். கமிஷனர் உடனடியாக கூட்டத்தை கூட்ட வேண்டும்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.
மண்டல குழு தலைவர் ஜெயபிரதீப் சந்திரனிடம் கேட்டபோது, ''என் மீது தவறான குற்றச்சாட்டை முன் வைத்து நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர கடிதம் கொடுத்துள்ளனர். குற்றச்சாட்டுகள் அனைத்திற்கும் ஆதாரம் உள்ளது. நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர்கொள்ள தயாராக இருக்கிறேன்,'' என்றார்.
தலைமையை எதிர்த்தவர்
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில், மாநகராட்சியின் 40வது வார்டில் போட்டியிட தி.மு.க.,வில் 'சீட்' கேட்டார் ஜெயபிரதீப். சீட் வழங்கப்படாததால், அதே வார்டில் சுயேச்சையாக போட்டியிட்டு வென்றார். தலைமை முடிவை மீறியதால், கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.
வார்டு 37ல் தி.மு.க., சார்பில் நின்று மகாலட்சுமி வெற்றி பெற்றார். இவரை குழு தலைவராக்கும் முயற்சியில், அமைச்சர் அன்பரசன் தரப்பினர் ஈடுபட்டனர். தாம்பரம் எம்.எல்.ஏ., ராஜா ஆதரவாளரான ஜெயபிரதீப்பும், மண்டல குழு தலைவர் போட்டியில் ஈடுபட்டார்.
இந்த போட்டியில், இரு தரப்பினருக்கும் தலா ஏழு ஓட்டுகள் கிடைத்தன. குலுக்கல் குறையில் ஜெயபிரதீப் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதில் இருந்து, மூன்றாவது மண்டலத்தில்,அமைச்சர் அன்பரசன், தாம்பரம் எம்.எல்.ஏ., ராஜா என,இரண்டு கோஷ்டிகளிடையே தொடர்ந்து உட்கட்சி பூசல் நிலவி வருகிறது.
தங்கள் வார்டுகளை மண்டல குழு தலைவர் ஜெயபிரதீப் தொடர்ந்து புறக்கணிப்பதாகவும், தன்னிச்சையாக செயல்படுவதாகவும் தி.மு.க., கவுன்சிலர்கள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனர்.
கட்சி தலைமை முடிவை எதிர்த்தவர்
நகர்புற உள்ளாட்சி தேர்தலில், மாநகராட்சியின் 40வது வார்டில் போட்டியிட தி.மு.க.,வில் 'சீட்' கேட்டார் ஜெயபிரதீப். சீட் வழங்கப்படாததால், அதே வார்டில் சுயேச்சையாக போட்டியிட்டு வென்றார். தலைமை முடிவை மீறயதால், கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.
வார்டு 37ல் தி.மு.க., சார்பில் நின்று மகாலட்சுமி வெற்றி பெற்றார். இவரை குழு தலைவராக்கும் முயற்சியில், அமைச்சர் அன்பரசன் தரப்பினர் ஈடுபட்டனர். தாம்பரம் எம்.எல்.ஏ., ராஜா ஆதரவாளரான ஜெயபிரதீப்பும், மண்டல குழு தலைவர் போட்டியில் ஈடுபட்டார்.
இந்த போட்டியில், இரு தரப்பினருக்கும் தலா ஏழு ஓட்டுகள் கிடைத்தன. குலுக்கல் குறையில் ஜெயபிரதீப் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதில் இருந்து, மூன்றாவது மண்டலத்தில், அமைச்சர் அன்பரசன், தாம்பரம் எம்.எல்.ஏ., ராஜா என, இரண்டு கோஷ்டிகளிடையே தொடர்ந்து உட்கட்சி பூசல் நிலவி வருகிறது. தங்கள் வார்டுகளை மண்டல குழு தலைவர் ஜெயபிரதீப் தொடர்ந்து புறக்கணிப்பதாகவும், தன்னிச்சையாக செயல்படுவதாகவும் தி.மு.க., கவுன்சிலர்கள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனர்.