ADDED : ஆக 25, 2025 11:07 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செங்கல்பட்டு ஒழலுார் ஊராட்சி மன்ற தலைவர் பிரபாகரன், கலெக்டர் சினேகாவிடம் அளித்த மனு:
காட்டாங்கொளத்துார் ஊராட்சி ஒன்றியம், ஒழலுார் ஊராட்சியில், சர்வே எண் 440ல் உள்ள 2.5 ஏக்கர் நிலத்தில், அரசின் மூலமாக 37 திருநங்கையருக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கியதை ரத்து செய்ய வேண்டும். சர்வே எண் 439ல் 1.5 ஏக்கர் நிலத்தையும் சேர்த்து, தகுதியுடைய ஏழை மக்களுக்கு வழங்க வேண்டும்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டிருந்தது.
மனுவை விசாரித்து நடவடிக்கை எடுக்க, கலெக்டர் சினேகா, தாசில்தாருக்கு உத்தரவிட்டார்.