/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
வடிகால்வாயில் மலம் துாய்மைப்படுத்த கோரி மனு
/
வடிகால்வாயில் மலம் துாய்மைப்படுத்த கோரி மனு
ADDED : ஏப் 23, 2025 08:45 PM
திருப்போரூர்:திருப்போரூர் அடுத்த கரும்பாக்கம் ஊராட்சி, பூயிலுப்பை கிராமத்தில், டாக்டர் அம்பேத்கர் தெரு உள்ளது.
இத்தெருவில் புதிதாக அமைக்கப்பட்ட வடிகால்வாயில், மர்ம நபர்கள் மலம் கழித்ததால் துர்நாற்றம் வீசுவதாகவும், துாய்மைப்படுத்த வேண்டும் எனவும் கூறி, அப்பகுதிவாசிகள் நேற்று, திருப்போரூர் பி.டி.ஓ., அலுவலகம் வந்து, கோரிக்கை மனு அளித்தனர்.
மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:
பூயிலுப்பை கிராமம், டாக்டர் அம்பேத்கர் தெருவில், புதிதாக வடிநீர்கால்வாய் அமைக்கப்பட்டது.
கால்வாய் உள்பகுதியில் குடிநீர் குழாய் செல்கிறது.
கடந்த 22ம் தேதி கால்வாயில் துர்நாற்றம் வீசியதால், கால்வாயில் பார்த்த போது, மர்ம நபர்கள் மலம் கழித்திருந்தது தெரிந்தது. இதனால், குடிநீரில் மலம் கலக்கும் அபாயம் உள்ளது. ஊராட்சி நிர்வாகமும் இதை கண்டுகொள்ளவில்லை. அங்கு வசிக்கும் சில வீட்டின் கழிவுநீரும் கால்வாயில் விடப்படுகிறது.
இக்கழிவுகள் அனைத்தும் அருகே உள்ள சிவன் கோவில் குளத்தில் கலந்து, குளத்தின் நீரும் மாசடைகிறது. எனவே, கால்வாயில் உள்ள அசுத்த நீரை அகற்றி துாய்மைப்படுத்த வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
மனுவை பெற்ற பி.டி.ஓ., பூமகள்தேவி, கால்வாயை துாய்மைப்படுத்துவதற்கான நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்.