/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கிளாம்பாக்கம் ஏரியில் கழிவுநீர் கலப்பதை தடுக்க கோரி மனு
/
கிளாம்பாக்கம் ஏரியில் கழிவுநீர் கலப்பதை தடுக்க கோரி மனு
கிளாம்பாக்கம் ஏரியில் கழிவுநீர் கலப்பதை தடுக்க கோரி மனு
கிளாம்பாக்கம் ஏரியில் கழிவுநீர் கலப்பதை தடுக்க கோரி மனு
ADDED : ஜூலை 02, 2025 01:37 AM
செங்கல்பட்டு:ஊரப்பாக்கம் ஏரியில் கழிவுநீர் கலப்பதை தடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செங்கல்பட்டு மக்கள் நலன் காக்கும் கூட்டத்தில், கூடுதல் கலெக்டர் நாராயணசர்மாவிடம், சமூக ஆர்வலர் மற்றும் வழக்கறிஞர் உத்திரகுமாரன் ஆகியோர் அளித்த மனு:
வண்டலுார் அடுத்த கிளாம்பாக்கம் கலைஞர் நுாற்றாண்டு பேருந்து முனையம் உள்ளது. இந்த முனையத்திலிருந்து மழைநீர் வெளியே செல்வதற்கு, 14 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மழைநீர் கால்வாய் கட்டப்பட்டது.
இந்த கால்வாய் மூலம் அதிக அளவு கழிவுநீர் தினமும், ரயில்வே தண்டவாள சிறுபாலம் வழியாக சென்று, கிளாம்பாக்கம் ஏரியில் கலக்கிறது.
இதனால், நிலத்தடி நீர் மட்டம் பாதிக்கும் சூழல் உள்ளது. இதுதொடர்பாக, காட்டாங்கொளத்துார் வட்டார வளர்ச்சி அலுவலக சுகாதாரத்துறை ஆய்வாளர் நேரில் வந்து ஆய்வு செய்து, கழிவுநீர் கலப்பதை உறுதி செய்தார்.
ஏரிக்கு வராமல், கூவம் ஆற்றில் கலக்கும் விதமாக மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும் என, கலைஞர் நுாற்றாண்டு பேருந்து முனைய மாவட்ட வருவாய் அலுவலர், கலெக்டர், முதல்வர் தனிப்பிரிவு ஆகியோருக்கு கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது. இதுவரை நடவடிக்கை எடுக்காமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. எனவே, நிலத்தடி நீர் மாசடையாமல் இருக்க, கழிவுநீர் செல்வதை தடுக்க வேண்டும்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவின் மீது, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க, கூடுதல் கலெக்டர் நாராயணசர்மா உத்தரவிட்டார்.