/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பட்டா வழங்க கோரி வட்டாட்சியரிடம் மனு
/
பட்டா வழங்க கோரி வட்டாட்சியரிடம் மனு
ADDED : அக் 11, 2024 12:24 AM

மதுராந்தகம்:அச்சிறுபாக்கம் ஒன்றியத்திற்கு உட்பட்டு, கல்லியகுணம் ஊராட்சி அமைந்துள்ளது. இந்த ஊராட்சியில், 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
இதில், கல்லியகுணம் கிராமம், மேட்டு தெரு பகுதியில், 15க்கும் மேற்பட்ட குடும்பத்தினர், கடந்த மூன்று தலைமுறைகளாக வாழ்ந்து வருகின்றனர்.
தற்போது, தொடர்ந்து தங்களின் குடியிருப்பு பகுதிக்கு வீட்டுமனை பட்டா வழங்கக் கோரி, 20 ஆண்டுகளுக்கும் மேலாக, தொடர்ந்து கலெக்டர் மற்றும் வருவாய் கோட்டாட்சியர், வட்டாட்சியருக்கு மனு அளித்து வந்தனர்.
இது குறித்து, நேற்று, பட்டா வழங்க விரைந்து நடவடிக்கை எடுக்கக் கோரி, கிராமத்தைச் சேர்ந்த, 15-க்கும் மேற்பட்ட கிராம மக்கள,் வட்டாட்சியரை சந்தித்து மனு அளித்தனர்.