/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
எம்.எல்.ஏ., விடம் கோரிக்கை மனு
/
எம்.எல்.ஏ., விடம் கோரிக்கை மனு
ADDED : ஜன 26, 2025 09:49 PM
மறைமலை நகர்:காட்டாங்கொளத்துார் ஒன்றியம், கருநிலம் ஊராட்சி, பிரேமாவதி நகரில் 80க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன.
இந்த நகர் கடந்த எட்டு ஆண்டுகளுக்கு முன் புதிதாக அமைக்கப்பட்ட பகுதி இந்த பகுதில் தெரு விளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாததால் அப்பகுதி மக்கள்  செங்கல்பட்டு தி.மு.க.,-  எம்.எல். ஏ., வரலட்சுமியை மறைமலை நகர் முகாம் அலுவலகத்தில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.
மனுவில் கூறியிருப்பதாவது:
பிரேமாவதி நகர் பகுதியில் அடிப்படை வசதிகள் செய்து தர கோரி கருநிலம் கிராம சபை கூட்டம், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், முதல்வர் தனிப்பிரிவுக்கு மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கபட வில்லை.
தெருவிளக்குகள் இல்லாததால் வேலைக்கு சென்று இரவு நேரங்களில் வரும் பெண்கள் அச்சத்துடன் சென்று வருகின்றனர். இந்த பகுதியில் காலி இடத்தில் மருத்துவ குப்பைகள் கொட்டப்படுவதால் குடியிருப்பு வாசிகளுக்கு சுவாச பிரச்னை ஏற்பட்டு வருகிறது.
உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

