/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
நந்திவரம் அரசு பள்ளி அருகில் வேகத்தடை அமைக்க மனு
/
நந்திவரம் அரசு பள்ளி அருகில் வேகத்தடை அமைக்க மனு
ADDED : நவ 08, 2024 09:21 PM
கூடுவாஞ்சேரி:நந்திவரம்- - கூடுவாஞ்சேரி நகராட்சி துணைத் தலைவர் லோகநாதன், பள்ளி அருகில் வேகத்தடை அமைப்பது தொடர்பாக, கலெக்டருக்கு மனு அனுப்பியுள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது:
நந்திவரம் - நெல்லிக்குப்பம் சாலையில், அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப் பள்ளிகள், தனியார் பள்ளிகள் உள்ளன. இந்த சாலையில் உள்ள பள்ளிகளில், 8,000க்கும் அதிகமான மாணவர்கள் பயின்று வருகின்றனர்.
இவர்கள், காலை மற்றும் மாலையில், பள்ளி சென்று திரும்பும்போது, இந்த சாலையில் கூடுவாஞ்சேரியில் இருந்து திருப்போரூர் வரை, கனரக வாகனங்கள் அதிக அளவில் சென்று வருகின்றன.
இதனால், காலை மற்றும் மாலை வேளைகளில் பள்ளி சென்று திரும்பும் மாணவர்கள், இந்த சாலையில் ஒரு வித அச்சத்துடன் கடந்து செல்லும் நிலை உள்ளது.
அவர்கள் பாதுகாப்பாக சென்று வருவதற்கும், சாலையை கடப்பதற்கும், பள்ளி அருகில் வாகனங்கள் மிதமான வேகத்தில் செல்லும் வகையில், வேகத்தடைகள் அமைக்க, நெடுஞ்சாலைத்துறை நிர்வாகத்திற்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.