/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
முதலியார்குப்பம் கழிவெளி பகுதியில் சிலிக்கான் மணல் எடுப்பதாக புகார் எதிர்ப்பு தெரிவித்து கலெக்டரிடம் மனு
/
முதலியார்குப்பம் கழிவெளி பகுதியில் சிலிக்கான் மணல் எடுப்பதாக புகார் எதிர்ப்பு தெரிவித்து கலெக்டரிடம் மனு
முதலியார்குப்பம் கழிவெளி பகுதியில் சிலிக்கான் மணல் எடுப்பதாக புகார் எதிர்ப்பு தெரிவித்து கலெக்டரிடம் மனு
முதலியார்குப்பம் கழிவெளி பகுதியில் சிலிக்கான் மணல் எடுப்பதாக புகார் எதிர்ப்பு தெரிவித்து கலெக்டரிடம் மனு
ADDED : நவ 26, 2024 02:30 AM

செங்கல்பட்டு, செங்கல்பட்டு கலெக்டர் அலுவலகத்தில், வாராந்திரா மக்கள் குறை தீர்க்கும் கூட்டம், கலெக்டர் அருண்ராஜ் தலைமையில், நேற்று நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் சுபாநந்தினி உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.
இதில், இலவச வீட்டுமனை பட்டா, பட்டா மாற்றம், கணினியில் பட்டா திருத்தம், வேலை வாய்ப்பு, மின் இணைப்பு, தொழில் துவங்க வங்கி கடன், விதை உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய, 337 மனுக்கள் வரப்பெற்றன.
இந்த மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கலெக்டர் உத்தரவிட்டார். மேலும், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் சார்பில், குழந்தைககள் சட்டப்பூர்வ தத்தெடுப்பு மற்றும் குழந்தைகள் பாதுகாப்பை உறுதி செய்வது குறித்த விழிப்புணர்வு உறுதிமொழியை, கலெக்டர் மற்றும் அனைத்து துறை அதிகாரிகள், பள்ளி மாணவர்களுடன் எடுத்துக்கொண்டனர்.
மாற்றுத்திறனாளிகள் 12 பேர் குடும்பத்திற்கு, ஈமச்சடங்கிற்கான செலவின தொகை, தலா 17,000 ரூபாயும், ஒரு பயனாளிக்கு மோட்டார் பொருத்திய தையல் இயந்திரமும், கலெக்டர் வழங்கினார்.
வையாயூர் ஊராட்சியில், பட்டுவாரி நகரில் வீடு கட்டியுள்ளவர்களுக்கு மின் இணைப்பு வழங்கக்கோரி, கலெக்டரிடம் அப்பகுதிவாசிகள் மனு அளித்தனர்.
அதன் விபரம் வருமாறு:
மதுராந்தகம் தாலுகா, வையாவூர் ஊராட்சியில், பட்டுவாரி நகரில் ஆதிதிராவிட மக்கள், 256 குடும்பங்களைச் சேர்ந்தோர், இரண்டு ஆண்டுகளாக, அரசுக்கு சொந்தமான இடத்தில் வீடு கட்டி வசித்து வருகின்றனர். மின் இணைப்பு இல்லாததால், குழந்தைகள் படிக்க முடியாத சூழல் உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
முதலியார் குப்பம் கிராம மக்கள் அளித்த மனு வருமாறு:
செய்யூர் அடுத்த முதலியார்குப்பம் கிராமத்தில், தமிழ்நாடு கனிம நிறுவனம், 50 ஆண்டுகளாக சிலிக்கா மண் எடுத்து வருகின்றனர். இவர்கள், பல அடி ஆழத்திற்கு மண் எடுத்துள்ளனர்.
இதனால், கழிவெளி பூமிக்கு அடியில் உப்பு நீர் புகுந்து, குடிநீர் கெட்டு விட்டது. தண்ணீரில் மஞ்சள் கறை மற்றும் இரும்பு கறை படிவதால், தண்ணீர் எடுக்க முடியாத சூழல் உள்ளது.
நீர்வளம், நில வளம் மாசு அடைந்துள்ளது. அதனால், குடிநீர், விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. சிலிக்கான் மணல் எடுக்க தடைவிதிக்க வேண்டும். சுகாதாரமான குடிநீர் வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்.
இந்த மனு மீது கனிம வளத்துறை அதிகாரிகள் விசாரணை செய்து, நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கலெக்டர் உத்தரவிட்டார்.