/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
அரசு இடத்தை ஆக்கிரமித்து கட்டடம் அகற்றக்கோரி கலெக்டருக்கு மனு
/
அரசு இடத்தை ஆக்கிரமித்து கட்டடம் அகற்றக்கோரி கலெக்டருக்கு மனு
அரசு இடத்தை ஆக்கிரமித்து கட்டடம் அகற்றக்கோரி கலெக்டருக்கு மனு
அரசு இடத்தை ஆக்கிரமித்து கட்டடம் அகற்றக்கோரி கலெக்டருக்கு மனு
ADDED : அக் 23, 2024 01:41 AM

கூடுவாஞ்சேரி:நந்திவரம் - கூடுவாஞ்சேரி நகராட்சி, நந்திவரத்தில் உள்ள அரசு இடத்தை ஆக்கிரமித்து, கட்டப்பட்டு வரும் தனியார் கட்டடம் கட்டுமான பணியை தடுத்து நிறுத்தக்கோரி, கலெக்டருக்கு மனு அளிக்கப்பட்டுள்ளது.
நந்திவரம் கிராம நற்பணி மன்ற தலைவர் மணிவண்ணன் என்பவர் வழங்கியுள்ள மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:
நந்திவரம் கிராமம், புல எண்: 619/8 மேட்டு தெருவில் இருந்து, நங்கூர் நகர் செல்லும் வழியில் உள்ளது. இது, அரசு மேய்க்கால் புறம்போக்கு காலி மனையாகும்.
இங்கு, 8 சென்ட் அளவில் உள்ள இந்த இடத்தை, அப்பகுதி மக்கள் பயன்படுத்தி வந்தனர். இதை ஆக்கிரமிப்பு செய்யும் நோக்கத்தோடு, அப்பகுதியை சேர்ந்த தனிநபர் ஒருவர், தற்போது கட்டுமான பணிகளை செய்து வருகிறார்.
இது குறித்து, நகராட்சி நிர்வாகத்திற்கும், வருவாய் துறை அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவித்தும், இதுவரை ஆக்கிரமிப்புகளை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.
எனவே, அரசு நிலத்தை ஆக்கிரமித்து, அதில் கட்டப்பட்டு வரும் கட்டுமான பணிகளை நிறுத்தி, அரசு நிலத்தை மீட்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அந்த இடத்தில், அப்பகுதிவாசிகள் மற்றும் சிறுவர்கள் பயன்பெறும் வகையில், சிறிய பூங்கா அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.