/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
காயரம்பேடில் மழை வெள்ள பாதிப்பு தீர்வு காணக்கோரி கலெக்டருக்கு மனு
/
காயரம்பேடில் மழை வெள்ள பாதிப்பு தீர்வு காணக்கோரி கலெக்டருக்கு மனு
காயரம்பேடில் மழை வெள்ள பாதிப்பு தீர்வு காணக்கோரி கலெக்டருக்கு மனு
காயரம்பேடில் மழை வெள்ள பாதிப்பு தீர்வு காணக்கோரி கலெக்டருக்கு மனு
ADDED : அக் 01, 2024 12:22 AM
கூடுவாஞ்சேரி, - காயரம்பேடு ஊராட்சிக்கு உட்பட்ட விஷ்ணுபிரியா அவென்யூவில், ஒவ்வொரு மழை காலத்திலும் மழை நீர் தேங்கி, குடியிருப்புவாசிகள் சிரமம் அடைந்து வருகின்றனர்.
அதைக்கருத்தில் கொண்டு, விஷ்ணுபிரியா அவென்யூ குடியிருப்போர் நலச் சங்கத்தின் சார்பில், கலெக்டருக்கு மனு அனுப்பி உள்ளனர்.
அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:
காயரம்பேடு ஊராட்சிக்கு உட்பட்ட விஷ்ணுபிரியா அவென்யூ பகுதியில், அதிக அளவிலான குடியிருப்புகள் பெருகி வருகின்றன.
இப்பகுதி மிகவும் தாழ்வாக உள்ளது. அதனால், லேசாக மழை பெய்தாலும், மழை நீர் தேங்கி, இப்பகுதிவாசிகள் வீட்டை விட்டு வெளியே வர முடியாத சூழ்நிலை உள்ளது.
தற்போது, நெல்லிக்குப்பம் பிரதான சாலையில் இருந்து, மூலக்கழனி வரை நெடுஞ்சாலை துறை சார்பில், மழைநீர் வடிகால்வாய் அமைக்கப்பட்டு வருகிறது.
இது, சாலையை விட இரண்டு அடி உயரமாக உள்ளது. அதனால், எங்கள் பகுதிக்கு மழையால் அதிக பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது.
எனவே, இப்பகுதியில் மழை காலங்களில் பாதிப்பு ஏற்படாமல் இருக்க, பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.