/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
சாலையை சீரமைக்க கோரி ஊராட்சி தலைவியிடம் மனு
/
சாலையை சீரமைக்க கோரி ஊராட்சி தலைவியிடம் மனு
ADDED : ஜன 30, 2024 03:54 AM
கூடுவாஞ்சேரி : ஊரப்பாக்கத்தில் சாலையை சீரமைக்கக்கோரி, ஊராட்சி தலைவியிடம், பாரதி நகர் குடியிருப்போர் நல சங்கத்தினர் மனு வழங்கினர்.
அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:
ஊரப்பாக்கம் பாரதி நகர் பகுதியில் உள்ள சாலைகள், 18 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்டவை.
தற்போது, அந்த சாலைகள் அனைத்தும், மேடுபள்ளமாகவும், குண்டும் குழியுமாகவும், ஜல்லிக்கற்கள் பெயர்ந்து, போக்குவரத்துக்கு லாயக்கற்ற முறையில் உள்ளன.
மேலும், தெருக் குழாய்களில் குடிநீர் வருவதில்லை. எனவே, எங்கள் பகுதியில் உள்ள சாலையை சீரமைத்தும், குடிநீர் தங்குதடையின்றி கிடைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.
மனுவை பெற்றுக்கொண்ட ஊராட்சி தலைவி பவானி, சாலை மற்றும் குடிநீர் வசதியை விரைந்து சீரமைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.