/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
சாலையில் மண் குவியல் வாகன ஓட்டிகள் திணறல்
/
சாலையில் மண் குவியல் வாகன ஓட்டிகள் திணறல்
ADDED : ஏப் 14, 2025 11:48 PM

திருப்போரூர், திருப்போரூர் -- செங்கல்பட்டு சாலையில், தினமும் ஏராளமான வாகனங்கள் செல்கின்றன.
இந்த சாலையில் உள்ள 'மீடியன்' பகுதியில், அதிக அளவில் மண் குவிந்துள்ளது. குறிப்பாக, கரும்பாக்கம் உள்ளிட்ட கிராமப் பகுதிகளில் மண் அதிக அளவில் குவிந்துள்ளது.
இதனால், வாகனங்கள் செல்லும் போது, மண் காற்றில் பறப்பதால், இருசக்கர வாகனங்களில் செல்லும் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.
திடீரென கண்களில் மண் விழுவதால், பலர் விபத்தில் சிக்கும் சூழல் ஏற்பட்டு உள்ளது. இதனால், உயிரிழப்புகளும் ஏற்பட வாய்ப்புள்ளது.
எனவே, சாலையின் மையப்பகுதியில் குவிந்துள்ள மண்ணை அகற்ற, நெடுஞ்சாலைத் துறையினர் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.