/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கால்வாய் பணியில் குழாய் உடைப்பு 5 லட்சம் லிட்டர் பாலாறு குடிநீர் வீண்
/
கால்வாய் பணியில் குழாய் உடைப்பு 5 லட்சம் லிட்டர் பாலாறு குடிநீர் வீண்
கால்வாய் பணியில் குழாய் உடைப்பு 5 லட்சம் லிட்டர் பாலாறு குடிநீர் வீண்
கால்வாய் பணியில் குழாய் உடைப்பு 5 லட்சம் லிட்டர் பாலாறு குடிநீர் வீண்
ADDED : ஜூலை 29, 2025 11:42 PM

தாம்பரம்,தாம்பரத்தில், புறவழிச்சாலை அணுகு சாலையில் நடந்து வரும் மூடுகால்வாய் பணியின் போது, பாலாறு குடிநீர் திட்ட பிரதான குழாய் உடைக்கப்பட்டதால், 5 லட்சம் லிட்டர் குடிநீர் வீணாக வெளியேறியது.
தா ம்பரத்தை அடுத்த இரும் புலியூர் கிழக்கு பகுதியில், விமானப்படை பயிற்சி மைய சுற்றுச்சுவரை ஒட்டி, பெரிய ஏரி உள்ளது.
மழை காலத்தில் இவ்வேரி நிரம்பினால், இரும்புலியூர் அருள் நகர் அருகேயுள்ள கலங்கல் வழியாக தண்ணீர் வெளியேறி, ரயில்வே தண்டவாளத்தை கடந்து, மேற்கு தாம்பரம் வழியாக அடையாறு ஆற்றுக்கு செல்லும்.
அதற்கான முறையான கால்வாய் இல்லாததால், இரும்புலியூர் மற்றும் பீர்க்கன்காரணை பகுதிகள் வெள்ளத்தில் மூழ்குகின்றன. இதற்கு தீர்வாக, ஏரியில் இருந்து வெளியேறும் உபரி நீர், குடியிருப்பு களை சூழாத வகையில், இரும்புலியூர் - ரயில்வே லைன் - முடிச்சூர் சாலை வழியாக சென்று, அடையாறு ஆற்றில் கலக்கும் வகையில், நீர்வளத்துறை சார்பில், 12,000 அடி நீளத்திற்கு, 96 கோடி ரூபாய் செலவில், மூடுகால்வாய் கட்டும் பணி நடந்து வருகிறது.
முதற்கட்டமாக, இரும்புலியூர் ஏரி முதல் பழைய ஜி.எஸ்.டி., சாலை வரை கால்வாய் கட்டும் பணி முடிக்கப்பட்டுள்ளது.
அடுத்த கட்டமாக, இரும்புலியூர் டி.டி.கே., நகர் சுரங்கப்பாதை முதல் தாம்பரம் - முடிச்சூர் சாலை வழியாக, 1 கி.மீ., துாரத்திற்கு கால்வாய் கட்டும் பணி நடந்து வருகிறது.
இக்கால்வாய், 9 அடி உயரத்தில் கட்டப்படுவதால், நேற்று முன்தினம் அதற்காக பள்ளம் தோண்டும் போது, அவ்வழியாக செல்லும் பாலாறு குடிநீர் பிரதான குழாயை உடைத்து விட்ட னர்.
இதனால், குழாயில் இருந்து தண்ணீர் பீய்ச்சி அடித்து வெளியேறியது. அந்த வகையில், 5 லட்சம் லிட்டர் குடிநீர் வீணானது. அதன்பின், மாநகராட்சி ஊழியர்கள், குடிநீர் செல்வதை நிறுத்தினர். அதை தொடர்ந்து, உடைந்த குழாயை சரிசெய்யும் பணி, நேற்று மேற் கொள்ளப்பட்டது.