/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
வெங்கலேரியில் மீட்கப்பட்ட நிலத்தில் 2,000 மரக்கன்றுகள் நடும் பணி துவக்கம்

ADDED : மே 18, 2025 01:56 AM

திருப்போரூர்:வெங்கலேரியில் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்ட நிலத்தில் மீண்டும் 2,000 மரக்கன்றுகள் நடும் பணி நேற்று துவங்கியது.
திருப்போரூர் அடுத்த ஆலத்துார் ஊராட்சி வெங்கலேரி கிராமத்தில், ஓ.எம்.ஆர்., சாலையை ஒட்டி வேம்புலி அம்மன் கோவில் மற்றும் குளம் சார்ந்த 3.5 ஏக்கர் நிலம் உள்ளது.
இந்த நிலங்கள் தனிநபர் ஆக்கிரமிப்பு தொடர்பாக அப்பகுதி மக்களின் புகார் அடிப்படையில் வருவாய் துறை அதிகாரிகள் மூலம் குளம் மற்றும் கோவில் சார்ந்த இடங்களை ஆய்வு செய்து ஆக்கிரமிப்பை அகற்றினர்.
மீட்டெடுக்கப்பட்ட நிலத்தில் மீண்டும் ஆக்கிரமிப்புகள் ஏற்படாத வகையில் மரக்கன்றுகள் நடவு செய்து பராமிக்க ஆலத்துார் ஊராட்சி நிர்வாகம் முடிவு செய்தது.
ஆலத்தூர் ஊராட்சி நிர்வாகம், சென்னை துவக்கம் வெல்பேர் அசோசியேஷன், விஸ்டியான் நிறுவன உதவியுடன் மரக்கன்றுகள் நடவு செய்ய இடத்தை தூய்மைபடுத்தி பள்ளம் எடுத்து ஏற்பாடு செய்யப்பட்டது. 100 க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, 2, 000 மரக்கன்றுகள் நடும் பணியை துவக்கினர். நேற்று 500 மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டன.